இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற 38 வகையான விளையாட்டுகளுடன் கூடுதலாக புதிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி வில்வித்தை, வூஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர்விளையாட்டுகளான காயக்கிங், கேனோயிங் உள்ளிட்ட போட்டிகள் புதிதாக இடம்பெறுகின்றன. இதன் மூலம் மொத்தம் 45 வகையான விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

