• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முதல்முறையாக வீட்டை வாடகைக்கு எடுக்கப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
முதல்முறையாக வீட்டை வாடகைக்கு எடுக்கப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2021-ல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, இந்தியாவில் கல்வி காரணங்களுக்காக மட்டுமே 3.3 மில்லியன் நபர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அப்படி வீட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய மற்றும் பொதுவான ஒரு சவால் என்பது சிறந்த வாடகை இடத்தைக் கண்டுபிடிப்பது. பட்ஜெட் ஒரு பக்கம் இருந்தாலும் தெரியாத ஒரு இடத்திற்கு இடம்பெயரும் போது பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியான சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சரியான இடத்தைத் தேர்வு செய்தல்:

பிரபலமான இடத்தை நோக்கி ஈர்ப்பு வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால், மலிவான மற்றும் நடைமுறைக்கு உட்பட்ட இடத்தைத் தேர்வு செய்வது அவசியம். உதாரணமாக, பெங்களூருவில் கோரமங்களா, மும்பையில் பாந்த்ரா அல்லது புனேயில் கூர்குவான் போன்ற இடங்கள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவை உங்களுடைய பட்ஜெட்டைக் காலி செய்துவிடலாம். மாறாக உங்களுடைய வேலை அல்லது கல்லூரிக்கு அருகில், பொதுப் போக்குவரத்து எளிதாகக் கிடைக்கக்கூடிய, பாதுகாப்பான மற்றும் அத்தியாவசிய வசதிகள் நிறைந்த இடத்தைத் தேர்வு செய்யுங்கள்.

பகிரப்பட்ட இடத்தைக் கருத்தில் கொள்ளவும்: 

இது உங்களுடைய வாடகை வீட்டிற்கான செலவைக் குறைப்பதற்கான மிகவும் எளிமையான வழி. இது வாடகையைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், அத்தியாவசியத் தேவைகளுக்கான பில், வீட்டைப் பராமரிப்பதற்கான செலவுகள் மற்றும் மளிகைச் சாமான் செலவுகள் போன்றவற்றையும் பகிர்ந்துகொள்ளலாம்.

குறிப்பாக வேறு ஒரு நபருடன் நீங்கள் இருக்கும்போது, குடும்பத்தை விட்டுத் தூரமாக இருக்கிறோமே என்ற கவலை சற்று குறைவாகவே இருக்கும். எனினும், இது மாதிரி பகிரப்பட்ட இடங்களைத் தேர்வு செய்யும்போது உடன் இருக்கும் நபர் உங்களுக்குத் தெரிந்தவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்.

குறைவாக வாங்கவும், அதிகமாக வாடகைக்கு எடுக்கவும்: 

இளைஞர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்தவுடனே மரச் சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் அல்லது வாகனங்கள் போன்றவற்றில் அவசரப்பட்டு முதலீடு செய்வது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. ஒரு இடத்தில் நீங்கள் ஒரு சில வருடங்கள் மட்டுமே வாழப் போகிறீர்கள் என்று வரும்போது உங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக அவற்றை வாடகைக்கு எடுப்பது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்கும். வீட்டு உபகரணங்கள், அத்தியாவசியங்கள் மற்றும் வாகனங்களை கூட நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம்.

ஆவணங்களைத் தயார் நிலையில் வைக்கவும்:

வாடகை ஒப்பந்தங்கள் முதல் ஆதார் அட்டை மற்றும் கல்லூரி IDகள் போன்ற டாக்குமெண்ட்களைப் புதிய இடத்திற்குச் செல்லும்போது நீங்கள் எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த அத்தியாவசிய டாக்குமெண்டுகளுக்கான நகல்களை எப்பொழுதும் ஆன்லைனில் பாதுகாப்பாகச் சேமித்து வையுங்கள். அவற்றை உங்களுடைய கூகுள் டிரைவில் சேமித்து வையுங்கள்.

கேட்டட் கம்யூனிட்டியில் வாடகைக்குச் செல்லவும்: 

தனி வீடுகள் குறைவான வாடகையில் கிடைத்தாலும் அவற்றில் அத்தியாவசியச் சேவைகள் மற்றும் பாதுகாப்புச் சத்துக் குறைவாக இருக்கும். மறுபுறம் கேட்டட் கம்யூனிட்டி என்று வரும்போது 24/7 பாதுகாப்பு, பராமரிப்பு ஊழியர், ஜிம், நீச்சல்குளம், பேட்மிட்டன், டென்னிஸ் மற்றும் ஃபுட்பால் கோர்ட், பவர் பேக்கப் மற்றும் சிறந்த சுகாதாரம் ஆகிய வசதிகள் இருக்கும். எனவே, முதல்முறையாக வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் இது மாதிரியான கேட்டட் கம்யூனிட்டியைத் தேர்வு செய்யும்போது பாதுகாப்பான மற்றும் நல்ல லைஃப்ஸ்டைல் உங்களுக்குத் தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும்.

இதையும் படிங்க: விமான விபத்திற்கு காப்பீடு வழங்கும் கிரெடிட் கார்டு…! அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும். வாடகை மற்றும் அட்வான்ஸ் போன்ற விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், பெயிண்டிங் சார்ஜஸ் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும் பட்சத்தில் வீடு புதிதாகப் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். ஏனெனில், பெயிண்டிங்கான செலவுகள் பெரும்பாலும் ஒரு மாத வாடகைச் செலவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய மாத வாடகை 50,000-விட அதிகமாக இருந்தால் 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 30, 2025 10:22 PM IST

Read More

Previous Post

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு? | indian railways hikes Passenger fare How much increased per kilometre

Next Post

பினாங்கு, பாயன் லெபாஸில் சிதைந்த நிலையில் இருந்த இரண்டு உடல்கள் மீட்பு | Makkal Osai

Next Post
பினாங்கு, பாயன் லெபாஸில் சிதைந்த நிலையில் இருந்த இரண்டு உடல்கள் மீட்பு | Makkal Osai

பினாங்கு, பாயன் லெபாஸில் சிதைந்த நிலையில் இருந்த இரண்டு உடல்கள் மீட்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin