• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 | UTT Season 6 U Mumba wins first-ever championship

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 | UTT Season 6 U Mumba wins first-ever championship
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதினார். இதில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் 2-1 (11-9, 10-11, 11-5) என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்தார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ், ஆகாஷ் பால் ஜோடியானது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து), ஜீத் சந்திரா ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி 3-0 (11-6, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் முழுமையாக வெற்றி பெற்றது. இதன் மூலம் யு மும்பா அணி 7-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் அபிநந்த் பிபி, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திராவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை ஜெய்ப்பூர் அணியின் ஜீத் சந்திரா 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் ஜீத் சந்திரா 11-8 என தன்வசப்படுத்தினார். இதனால் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 4-7 என சற்று நெருங்கியது.

கடைசி செட்டில் அபிநந்த் சவால் கொடுத்தார். ஒரு கட்டத்தில் 8-8 என சமநிலையை அடையச் செய்த அபிநந்த் அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 புள்ளிகளை சேர்த்து 11-8 என வெற்றி பெற்றார். இதனால் யு மும்பா அணி 8-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அபிநந்த் தமிழகத்தின் சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் ஆவார்.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் 8 புள்ளிகளை முதலில் சேர்க்கும் அணி வெற்றி பெறும். யு மும்பா அணி 4-வது ஆட்டத்தின் முடிவிலேயே 8 புள்ளிகளை எட்டியதால் வாகை சூடியது. இதன் காரணமாக கடைசியாக நடைபெற இருந்த மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடத்தப்படவில்லை. இதில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோர்படே, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் மோத இருந்தனர்.

சாம்பியன் பட்டம் வென்ற யு மும்பா அணிக்கு கோப்பையுடன் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி ரூ.40 லட்சம் பரிசுத் தொகையை பெற்றது. அரை இறுதியில் தோல்வி அடைந்த தபாங் டெல்லி, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு தலா ரூ.17.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் மதிப்பு மிக்க வீரராக டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய நட்சத்திரம் ஹர்மீத் தேசாய் தேர்வானார். அதேவேளையில் மதிப்புமிக்க வீராங்கனையான யு மும்பா அணிக்காக விளையாடிய ருமேனியா நட்சத்திரம் பெர்னாடெட் சாக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்தியன் ஆயில் ஷாட் ஆஃப் தி சீசன் விருதை கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணிக்காக விளையாடிய புயிர்ட்டோ ரிக்கோ நட்சத்திரம் அட்ரியானா டயஸ் (அட்ரியானா டயஸ் vs கிருத்விகா ராய், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் ) வென்றார்.



Read More

Previous Post

எந்த வயதில் விமானிகள் ஓய்வு பெறுவார்கள் தெரியுமா? ராணுவ மற்றும் கமர்ஷியல் விமானங்களுக்கான விதிகள் என்ன?

Next Post

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

Next Post
ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin