சமீபத்திய சில வருடங்களாகவே வழக்கமான வங்கிகளுடன் ஒப்பிடும்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வீட்டுக் கடன்களை வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்குமா? உங்களுடைய இந்த கேள்விக்கு இந்தப் பதிவின் மூலமாக பதில் காணலாம்.
NBFC மற்றும் வங்கிகள் இடையே உள்ள உண்மையான வேறுபாடு என்ன?
NBFCகள் என்பது வங்கிகளைப் போன்ற கடன் சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடிய நிறுவனங்கள். ஆனால் அதே சமயங்களில் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிகளுக்கும் கட்டாயமாக உடன்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வட்டி விகிதம், கடன் மதிப்பீடு மற்றும் கடன் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் என்று வரும்போது இவர்கள் தங்களுக்கே உரிய சில விதிகளை கொண்டிருப்பார்கள்.
முதல்முறையாக ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு இது மாதிரியான ஒரு நெகிழ்வுத்தன்மை என்பது இருமுனை கொண்ட ஒரு கத்தி போல அமைகிறது. இதில் இருக்கக்கூடிய நன்மையைப் பற்றி பேசும்போது குறைவான கிரெடிட் ஸ்கோர், நிலையான வேலை இல்லாமல் இருப்பது அல்லது அதிகாரப்பூர்வமற்ற வருமானம் போன்ற காரணங்களுக்காக கடன் வழங்குவதை NBFC-கள் நிராகரிக்காது. ஆனால், அதே சமயத்தில் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இவர்களுடைய வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் மற்றும் மறைமுக கட்டணங்கள் எக்கச்சக்கமாக விதிக்கப்படும்.
முதல்முறையாக கடன் வாங்குபவர்கள் ஏன் பெரும்பாலும் NBFC-களை தேர்ந்தெடுக்கிறார்கள்?
NBFC-கள் கடன் விண்ணப்பங்களை ப்ராசஸிங் செய்வதற்கு குறைவான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஒருவேளை நீங்கள் சுயதொழில் செய்து வருபவராகவோ, சமீபத்தில் வேலையை மாற்றியவராகவோ அல்லது புதிதாக கடன் வாங்குபவராக இருந்தாலோ, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் NBFC-கள் உங்களுக்கு கடனை வழங்கும். இவர்களுடைய வாடிக்கையாளர் சேவை என்பது அரசுத்துறை வங்கிகளைவிட சற்று அதிகமாக உள்ளது.
மேலும், இவர்களுடைய டாக்குமெண்டேஷன் மற்றும் வெரிஃபிகேஷன் ஆகியவை முற்றிலும் டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில NBFCகள் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல EMIகளை அமைப்பதற்கு அனுமதிக்கிறது. உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் போது EMIகளையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
வங்கிகள் தொடர்ந்து அதிக நன்மைகளை பெற்றிருக்கிறது:
NBFCகளிடமிருந்து கடன் வாங்குவது சௌகரியமானதாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கான செலவைப் பற்றி யோசிக்கும்போது வங்கிகள் சிறந்த ஆப்ஷன்களாக அமைகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் வழக்கமாக குறைவான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக, நல்ல கடன் வரலாறு கொண்டிருக்கும் கடன் பெறுபவர்களுக்கு குறைவான வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ப்ராசசிங் கட்டணம், கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணம், கடன் அக்கவுண்ட்டை முன்னதாக மூடுவதற்கான விதிகள் ஆகியவை கடன் பெறுநருக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கும்.
இரண்டில் எதனை தேர்வு செய்ய வேண்டும்?
ஒருவேளை நீங்கள் நல்ல கிரெடிட் வரலாறு, வழக்கமான வருமானம் மற்றும் கடன் விண்ணப்பத்தை ப்ராசஸிங் செய்வதற்கு போதுமான நேரம் கொண்ட ஒரு மாத வருமானம் பெறக்கூடிய நபர் என்றால் உங்களுக்கு வங்கி கடன் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். ஒருவேளை உங்களுடைய பொருளாதார சூழ்நிலையால் வழக்கமான இந்த வரம்புகளை கடைபிடிக்க முடியாவிட்டால் நீங்கள் NBFCகளை நாடலாம்.
உங்களுக்கு ஏற்றார் போல அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைத்துத் தரும் பட்சத்தில் NBFC-கள் முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு சிறந்த ஒன்றாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கான பிரீமியம் செலவு என்று வரும்போது கட்டாயமாக வங்கிகள் மேலோங்கி நிற்கின்றன. எனவே, கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதம், ப்ராசசிங் கட்டணம், திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், வாடிக்கையாளர் கருத்துக்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் தவறான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இருந்தால்கூட அதன் பிறகு உங்களுடைய கடனை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும் ஒருபோதும் தயங்க வேண்டாம்.
May 11, 2025 12:48 PM IST
முதல்முறையாக கடன் வாங்குபவர்கள் வங்கி vs NBFC: இரண்டில் எதை தேர்வு செய்வது நல்ல ஆப்ஷனாக இருக்கும்…?

