அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் முதலையின் வயிற்றில் இருந்து 70 நாணயங்கள் நீக்கப்பட்டுள்ளது.
ஹென்றி டோர்லி உயிரியல் பூங்கா மற்றும் மீன்கள் கண்காட்சி மையத்தில் வளர்ந்து வரும் உயிரினங்களுக்கு வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 36 வயதான திபோடாக்ஸ் (Thibodaux) என்ற முதலையின் வயிற்றில் உலோகம் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, திபோடாக்ஸ் முதலைக்கு மயக்க மருந்து கொடுத்து, வயிற்று வழியாக கேமராவின் உதவியுடன் நாணயங்கள் கண்டறியப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டது.
சுமார் 70 அமெரிக்க நாணயங்கள் முதலையின் வயிற்றில் இருந்து வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தங்களது சமூக வலைத்தளத்தில் உயிரியல் பூங்கா நிர்வாகம் பதிவிட்டுள்ளது.
முதலைக்குச் சிகிச்சை பார்த்த கால்நடை மருத்துவர் டாக்டர். கிறிஸ்டினா ப்ளூக் இதுகுறித்து பேசும்போது, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் முதலை இருக்கும் தண்ணீரில் நாணயங்களைப் போடுகின்றனர். இதன் காரணமாக நாணயங்களை முதலை விழுங்கியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், முதலையின் வயிற்றில் இருந்து 70 நாணயங்கள் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதாகவும், அதனை எக்ஸ்ரே மூலம் தெளிவுபடுத்திக்கொண்டதாகவும் கூறினார்.
Also Read : 20 போன்களை பயன்படுத்தும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை…காரணம் இதுதான்..!
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எந்த விதமான தண்ணீர் இருக்கும் பகுதிகளிலும் நாணயங்களைப் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
தண்ணீரில் காசு போட்டு வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற மூடநம்பிக்கையில், விலங்குகளின் வாழ்விடங்களில் காசுகளைப் போடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நேர்கின்றதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…