கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் போலி முதலீட்டுத் திட்டங்களால் (Investment Scams) சுமார் 1.37 பில்லியன் ரிங்கிட் அளவுக்குப் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிர்ச்சித் தகவலை கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 9,296 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஏற்பட்ட மொத்த இழப்பு 1.37 பில்லியன் ரிங்கிட் என்றும், இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டோர் 31 முதல் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என்றும், புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மோசடி வழக்குகள் 60% அதிகரித்துள்ளன.
மக்கள் ஏமாறுவதற்குப் பின்வரும் கவர்ச்சிகரமான பொய்களே காரணம் என புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) தெரிவித்துள்ளது:
மோசடிக்கு கும்பல்கள் இதில் அதிக லாபம், பூஜ்ஜிய ஆபத்து என்றும், மிகக் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை காட்டுவது, மற்றும் “இந்த வாய்ப்பு இன்றோடு முடிவடைகிறது” எனக் கூறி உடனடியாகப் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துவது போன்ற யுத்திகளை கையாளுகின்றன.
அத்தோடு சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் (Influencers) அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட பிரபலங்களின் வீடியோக்களைக் கொண்டு மக்களை நம்ப வைக்கின்றனர்.




