இந்தியாவில் உள்ள 30 முன்னணி இடங்களில் வாழும் பெண்களின் முதலீட்டு தேர்வுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் மார்க்கெட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்ற புதிய முதலீட்டு ஆப்ஷன்களை தேர்வு செய்கின்றனர். மறுபுறம், B30 நகரங்களில் வாழும் பெண்கள் வழக்கமான முதலீட்டு ஆப்ஷன்களில் முதலீடு செய்வதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஃபிக்சட் டெபாசிட்கள் மற்றும் தங்கம் போன்றவை அடங்கும். இந்த தகவல் இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் ஃபண்ட் ஹவுஸ்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் வெளியிட்ட பெண்களின் முதலீட்டு நடத்தை சார்ந்த அறிக்கை 2024 (Women Investment Behaviour Report 2024) என்ற ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து ஆக்சிஸ் AMC -இன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி B கோப் குமார் பேசுகையில், “மியூச்சுவல் ஃபண்ட் துறையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களுடைய பொருளாதார யுக்தியின் ஒரு பகுதியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். Axis MF முதலீட்டாளர்களின் முதலீட்டு அமைப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கஸ்டமர் தளத்தில் 30 சதவீதம் பெண்கள் இருப்பதும், மொத்த AUMஇல் 35 சதவீத பங்கை பெண்கள் வகிப்பதும் தெரியவந்துள்ளது”.
AUM அல்லது அசட்ஸ் அண்டர் மேனேஜ்மென்ட் (Assets under management – AUM) என்பது முதலீட்டாளர்களுக்கு பதிலாக ஒரு நபர் அல்லது நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் முதலீடுகளின் மொத்த சந்தை மதிப்பு.
இதையும் படிக்க: ரூ.300-க்கும் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்… யாருக்கு எது பெஸ்ட்?
மேலும் நீண்ட கால முதலீட்டில் பெண் முதலீட்டாளர்கள் காட்டிவரும் ஆர்வம் குறித்தும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. நீண்டகால முதலீடு மூலமாக பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டை உறுதி செய்வது என்பது தனிநபர் தேவைக்காக மட்டுமின்றி விரிவான பொருளாதாரத்திற்கும் அவசியமானதாக அமைகிறது.
அதே நேரத்தில் செயலற்ற நிலையில் இருக்கும் பெண் முதலீட்டாளர்களின் வழக்கமான கருத்துக்களில் எக்கச்சக்கமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 71.9 சதவீத பெண்கள் சுயமாக முதலீடு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க:
Union Budget 2024: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இனிப்பான செய்தி… பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு?
இம்மாதிரியான போக்கு, இளம் தலைமுறைகளில் அதிகம் இருப்பதாக தெரியவருகிறது. அந்த வகையில் 25 முதல் 34 வயதிலான 75 சதவீத பெண்கள் மற்றும் 35 முதல் 44 வயதிலான 70% பெண்கள் தங்களுடைய பொருளாதார எதிர்காலத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சுயமாக முதலீடு சம்பந்தப்பட்ட தேர்வுகளை செய்து வருகின்றனர். இது காலப்போக்கில் நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
Fintech சேனல்களை பயன்படுத்தி முதலீடு செய்யும் ஆக்சிஸ் MF பெண் முதலீட்டாளர்கள் 14 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்து இருப்பது தெரிகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)