Last Updated:
பிரதமர் மோடி, பட்ஜெட் பிறகான கலந்துரையாடலில், தொழில்துறையினருக்கு முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, நிதி நிறுவனங்கள் முக்கியம் என வலியுறுத்தினார்.
முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பட்ஜெட்டிற்கு பிந்தையை கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் மோடி, காணொளி மூலம் கலந்து கொண்டார். “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம், சீர்த்திருத்தங்கள் மற்றும் நிதி” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், 11 ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பொது மூலதனச் செலவு, 2026-27 மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
#WATCH | PM Modi addresses post-Budget webinar on ‘Technology, reforms and finance for Viksit Bharat’, via video conferencing
He says,” No budget should be viewed in isolation. Nation-building is a continuous process; every budget is a step towards a larger goal. The big goal… pic.twitter.com/yHjCIrAu9t
— ANI (@ANI) February 27, 2026
வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை விரிவாகப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். நிதி நிறுவனங்கள் நடைமுறை தீர்வுகளை வழங்கவும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவ வேண்டும் என்று பட்ஜெட் பிறகான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
“முதலீடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்..” தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு


