வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருக்கும் தனது முதலாளியிடமிருந்து S$10,000-க்கும் அதிகமான பணத்தைத் திருடி பிடிபட்டுள்ளார்.
மியான்மரைச் சேர்ந்த அந்த பணிப்பெண், திருடிய பணத்தை வைத்து கொண்டு ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் வாங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
மது போதையில் சிராங்கூன் சாலையில் படுத்துக்கிடந்த ஆடவர் கைது
25 வயதான அந்த பணிப்பெண், தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 68 வயதுடைய லியு என்ற முதலாளி வீட்டில் அந்த பணிப்பெண் 2023 அக்டோபர் மாதம் வேலைக்கு எடுக்கப்பட்டார், அவருக்கு மாத சம்பளமாக S$550 கொடுக்கப்பட்டது.
முதலாளி உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சில சமயங்களில் பணம் எடுக்க பணிப்பெண் உதவியை அவர் நாடியுள்ளார்.
இதன் காரணமாக, ATM கார்டின் ரகசிய எண் பணிப்பெண்ணுக்கு தெரிந்துள்ளது.
இதை பயன்படுத்திக்கொண்ட பணிப்பெண் ATM அட்டையை பயன்படுத்தி பல முறை பணம் எடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
வாங்கி கணக்கில் இருந்து பணம் தொடர்ந்து குறைவதை அறிந்து, இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, அதன் பிறகு பணிப்பெண்ணின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அவர் S$100 முதல் S$500 வரை திருட தொடங்கி, மொத்தம் S$10,130 தொகையை திருடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“பணிப்பெண் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று எனக்கு தெரியவில்லை” என்று லியு கவலையுடன் கூறினார்.
“நான் பணிப்பெண்ணிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வேன்,” என்று கூறிய லியு, பணிப்பெண்ணுக்கு சரியாக சமைக்க தெரியாது என்பதால் நானே பணிப்பெண்ணுக்காக சமைத்தும் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், தவறு செய்ததை ஒப்புக்கொண்ட பணிப்பெண், மீண்டும் அதைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
மேலும் தன் மீது கருணை காட்டுமாறு அவர் நீதிமன்றத்தில் கெஞ்சினார், மேலும் தன்னை விரைவில் வீட்டிற்கு அனுப்புமாறும் நீதிபதியிடம் கேட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு 15 வகையான உணவுகளுடன் தடபுடலாக நடந்த விருந்து!