Last Updated:
பாஜகவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸும், பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் வரும் 23ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் பாஜகவிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே, மேற்குவங்கத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதற்குப் பதிலாக, தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்குவங்கத்தில் பாஜக நியமித்து இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இதே போன்று காங்கிரஸூம் பாஜக உடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க இருப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.


