Last Updated:
கர்நாடகா புத்தூர் பகுதியில் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 13 பேர் மயக்கம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 13 பேர் வரை மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் எனும் பகுதியில் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. அஷோக் குமார் ராய் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவும், புடவையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், சுமார் ஒரு லட்சம் பேர் வரை அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பகல் 12 மணிக்கு வர வேண்டிய மாநில முதலமைச்சர் சித்தராமையா ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது பிற்பகல் 1 மணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
அங்கு சிகிச்சை பெற்ற பலரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர். ஒரு சிலர் மட்டும் தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும், இதுவரை அந்த நிகழ்வில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
October 20, 2025 8:00 PM IST
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்! கர்நாடகாவில் அதிர்ச்சி