நாளையதினம் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’vன அறிவுரை வழங்கியுள்ளார்.
விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், அவரது மகன் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்தாலும், அதை என் மகனுக்காக மட்டுமே செய்கிறேன்.
இறுதியாக, விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்” என்று தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

