[ad_1]
கிரெடிட் கார்டு வாங்குவதற்கான குறைந்தபட்ச வருமானம் எவ்வளவு? மாத சம்பளம் மூலமாகவோ அல்லது சுய தொழில் மூலமாகவோ ஒவ்வொரு மாதமும் 15,000 முதல் 30,000 ரூபாய்க்கு உட்பட்டு இருக்கக்கூடிய நிலையான வருமானம் பெற்றுள்ள நபர்கள் கிரெடிட் கார்டுகளை வாங்கலாம். சம்பளம் என்பது கிரெடிட் கார்டு வழங்குவதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. வழக்கமாக ஒரு கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க நீங்கள் மாத வருமானம் பெறும் நபராகவோ அல்லது சுய தொழில் செய்யும் ஒரு நபராகவோ இருக்க வேண்டும்.
புதிதாக கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் கடன் உச்சவரம்பு என்பது வழக்கமாக சற்று குறைவானதாகவே இருக்கும். இது வெவ்வேறு வங்கி, விண்ணப்பதாரரின் வருமானம், வயது மற்றும் பிற காரணிகளை பொறுத்து அமையும்.
இந்த மாதிரியான கிரெடிட் கார்டுகளுக்கு நுழைவு அல்லது ஆண்டு மாரியான கட்டணம் என்பது குறைவாகவோ, கட்டணம் இல்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக கேஷ்பேக் கொடுக்கும் கார்டுகளை வாங்க முயற்சி செய்யுங்கள். மளிகை சாமான், எரிபொருட்கள் மற்றும் கேஸ், தண்ணீர், மின்சாரம் போன்ற யுட்டிலிட்டி பில்கள் அடங்கிய பிரிவுகளுக்கு நல்ல ரிவார்டுகள் அல்லது கேஷ்பேக்குகள் கொடுக்கும் கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும். ஃபிக்சட் டெபாசிட்டுகளை அடமானமாக கொண்டு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் முதல் முறையில் கிரெடிட் கார்டுகள் வாங்குபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். வழக்கமாக இந்த கார்டுகளுக்கு கஸ்டமரின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கு சமமான கடன் உச்சவரம்பு வழங்கப்படும். இதன் மூலமாக கார்டு ஹோல்டர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்கலாம்.
இப்போது பிரபலமான சில என்ட்ரி லெவல் கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்:-
இது அமேசான் பிரைம் மற்றும் பிரைம் அல்லாத மெம்பர்களுக்கு பல்வேறு விதமான பலன்களை வழங்குகிறது. இதன் மூலமாக கஸ்டமர்கள் ரிவார்டுகள் மற்றும் கேஷ்பேக் ஆகிய பலன்களை பெறலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ரிவார்டுகளுக்கு காலாவதி தேதி அல்லது உச்சவரம்பு கிடையாது. இந்த கார்டுக்கான நுழைவு கட்டணம் மற்றும் ஆண்டுவாரியான கட்டணம் பூஜ்ஜியம். 21 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த கார்டை வாங்கலாம். மாத வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் மாத வருமானமும், சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆண்டுவாரியான வருமானம் 3.6 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும்.
அமேசான் பிரைம் மெம்பருக்கு அமேசான் வெப்சைட்டில் செய்யும் டிரான்ஸாக்ஷன்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்காத நபர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அமேசான் பே வணிக பார்ட்னர்களிடம் இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலமாக 2 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். பிற அனைத்து பேமெண்ட்டுகளுக்கும் 1 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கார்டை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் மற்றும் ஆண்டுவாரியான கட்டணம் 499 ரூபாய். குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயது கொண்ட இந்திய குடிமக்கள் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மின்சாரம், கேஸ், DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றை Google Pay அப்ளிகேஷனில் செய்யும்போது 5% கிடைக்கும். Swiggy, Zomato மற்றும் Olaல் செய்யும் டிரான்சாக்ஷன்களுக்கு 4 சதவீத கேஷ்பேக்கும், பிற அனைத்து செலவுகளுக்கும் 1.5% கேஷ்பேக்கும் கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்களுக்கு ஒரு சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்படும். இதற்கான அதிகபட்ச உச்சவரம்பு என்பது ஒரு ஸ்டேட்மெண்ட்க்கு 500 ரூபாயாக உள்ளது. 400 முதல் 4000 ரூபாய்க்கு உட்பட்ட டிரான்ஸாக்ஷன்களுக்கு இந்த பலன் பொருந்தும்.
SimplyCLICK SBI கார்டு: இதற்கான நுழைவு கட்டணம் மற்றும் ஆண்டு மாரியான கட்டணம் 499 ரூபாய் மற்றும் வரிகள். குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 70 வயது கொண்ட இந்திய குடிமக்கள் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். 499 ரூபாய் ஆண்டு வாரியான கட்டணத்தை செலுத்தும் போது 500 ரூபாய் மதிப்பிலான அமேசான் கிஃப்ட் கார்டு வழங்கப்படும். Apollo 24 × 7/ BookMyShow / Cleartrip / Dominos / IGP / Myntra / Netmed / Yatra போன்ற தலங்களில் செய்யும் பேமெண்ட்களுக்கு 5X ரிவார்டு பாய்ண்டுகள் வழங்கப்படும். பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் முதல் 3000 ரூபாய்க்கு உட்பட்ட ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் 1 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
இதற்கு நுழைவு கட்டணம் மற்றும் ஆண்டு வாரியான கட்டணம் 500 ரூபாய் மற்றும் வரிகள். Amazon, Flipkart, Swiggy, Reliance Smart SuperStore மற்றும் BigBasket போன்ற பிளாட்ஃபார்ம்களில் செய்யும் டிரான்சாக்ஷன்களுக்கு 10X கேஷ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும். ஒரு காலாண்டில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக செய்யும் செலவுகளுக்கு 500 ரூபாய் மதிப்பு கொண்ட கிஃப்ட் வவுச்சர் கொடுக்கப்படுகிறது. இந்த கார்டு வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 60 ஆகும். மேலும் மாத வருமானம் 20,000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.
September 06, 2025 2:24 PM IST
முதன்முறையாக கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு உதவும் என்ட்ரி லெவல் கார்டுகள்.. முழு விவரம் இதோ!