• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை | team india to play south africa in womens cricket world cup final

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை | team india to play south africa in womens cricket world cup final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐசிசி உலகக் கோப்​பையை வெல்​லும் வேட்​கை​யுடன் இந்​திய மகளிர் அணி, இன்று தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதவுள்​ளது. இந்​தப் போட்டி நவி மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு தொடங்​க​வுள்​ளது.

13-வது ஐசிசி ஒரு​நாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி கடந்த செப்​டம்​பர் மாதம் 30-ம் தேதி தொடங்​கியது. இந்​தி​யா, இலங்கை நாடு​கள் இணைந்து இப்​போட்டியை நடத்தி வரு​கின்​றன.

இந்த போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்​றன. கடந்த 26-ம் தேதி​யுடன் லீக் ஆட்​டங்​கள் நிறைவு பெற்​றன. நடப்பு சாம்​பியன் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, தென்​ஆப்​பிரிக்​கா, இந்​தியா ஆகியவை முதல் 4 இடங்​களை பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறின. இலங்​கை, நியூஸிலாந்​து, வங்​கதேசம், பாகிஸ்​தான் ஆகிய அணி​கள் லீக் சுற்​றுடன் வெளி​யேறின. இந்​நிலை​யில் குவாஹாட்​டி​யில் கடந்த மாதம் 29-ம் தேதி நடை​பெற்ற முதல் அரை இறு​திப் போட்​டி​யில் தென்​ஆப்​பிரிக்கா அணி 125 ரன் வித்​தி​யாசத்​தில் இங்​கிலாந்​தை​யும், கடந்த 30-ம் தேதி நவி​மும்​பை​யில் நடை​பெற்ற 2-வது அரை இறு​தி​யில் இந்​தியா 5 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் ஆஸ்​திரேலிய அணி​யை​யும் தோற்​கடித்​தன.

2 நாள் ஓய்​வுக்​குப் பிறகு இறு​திப்​போட்டி நவி மும்​பை​யில் உள்ள டி.ஓய். பாட்​டீல் மைதானத்​தில் இன்று (நவம்​பர் 2) மாலை 3 மணிக்கு நடை​பெற்​றது. முதல்​முறை​யாகக் கோப்​பையை வெல்​லும் வேட்​கை​யில் இந்​திய அணி, தென்​ஆப்​பிரிக்க அணி​யுடன் மோதுகிறது.

இந்​நிலை​யில் நேற்று இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் லாரா வோல்​வார்ட்​டும் கோப்​பை​யுடன் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டனர்.

இந்​திய அணி இது​வரை 3 முறை உலகக் கோப்பை இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​யிருக்​கிறது. 2005-ல் ஆஸ்​திரேலி​யா​விட​மும், 2017-ல் இங்​கிலாந்​திட​மும் இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் தோல்வி கண்​டது. எனவே, இம்​முறை, தென் ஆப்​பிரிக்​காவை வீழ்த்தி இந்​திய அணி வெல்​ல​வேண்​டும் என்று ரசிகர்​கள் விரும்​பு​கின்​றனர்.

அரை இறுதி உற்​சாகம்: லீக் சுற்​றில், இந்​திய அணி, தென் ஆப்​பிரிக்​கா​விடம் 3 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டுள்​ளது. அரை இறு​திச் சுற்​றில் பலம்​வாய்ந்த ஆஸ்​திரேலிய அணி​யை, இந்​திய அணி​யினர் வென்று சாதனை படைத்​தனர். எனவே, அந்த உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் இந்​திய அணி​யின் நட்​சத்​திர வீராங்​கனை ஸ்மிருதி மந்​தனா (ஒரு சதம், 2 அரை சதங்​களு​டன் 389 ரன்​கள்), ஜெமிமா ரோட்​ரிக்ஸ் (ஒரு சதம், ஒரு அரை சதத்​துடன் 268 ரன்​கள்), கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர் (2 அரை சதங்​களு​டன் 240 ரன்​கள்), ரிச்சா கோஷ் (ஒரு அரை சதத்​துடன் 201 ரன்​கள்) ஆகியோர் அசுர பலத்​துடன் இருக்​கின்​றனர்.

அதே​போல் எதிரணியை மிரட்​டு​வதற்​காக தீப்தி சர்​மா, சரணி, கிராந்தி கவுட் ஆகியோர் காத்​திருக்​கின்​றனர். தீப்தி சர்மா 17 விக்​கெட்​களை​யும், சரணி 13 விக்​கெட்​களை​யும், கிராந்தி கவுட் 9 விக்​கெட்​களை​யும் கைப்​பற்றி மீண்​டும் ஒரு​முறை உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்​தக் காத்​திருக்​கின்​றனர்.

அதே​போல் லாரா வோல்​வார்ட் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி​யும் முதல் தடவை​யாக உலக கோப்​பையை வெல்​லும் முனைப்​பில் களமிறங்​கு​கிறது. அந்த அணி முதல் முறை​யாக இறு​திச்​சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. லீக் சுற்​றில் அந்த அணி, இந்​தி​யாவை வீழ்த்தி இருப்​ப​தால் கூடு​தல் உற்​சாகத்​துடன் களமிறங்​கு​கிறது.

அந்த அணி பேட்​டிங்​கில் லாரா வோல்​வார்ட், டாஸ்​மின் பிரிட்​ஸ், மரி​சான் காப் உள்​ளிட்​டோர் மீண்​டும் ஒரு முறை சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​தக் காத்​திருக்​கின்​றனர். அவர்​களைச் சமாளிப்​பது இந்​திய பந்து வீச்​சாளர்​களுக்கு சவாலாக இருக்​கும் என்று தெரி​கிறது.

அதே​போல் பந்​து​வீச்​சில், மரி​சான் காப், அயபோங்கா காக்​கா, நடின் டி கிளர்க், நான்​குலுலேக்கோ லாபா ஆகியோர் இந்​திய அணியை அச்​சுறுத்​தத் தயா​ராக உள்​ளனர். ஒரு​நாள் போட்​டிகளில் இது​வரை, இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி 34 முறை மோதி​யுள்​ளன. இதில் இந்​தியா 20 போட்​டிகளி​லும் தென் ஆப்​பிரிக்கா 13 போட்​டிகளி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஒரு ஆட்​டம் முடிவு இல்​லாமல் போனது.

அணி விவரம் – இந்​தி​யா: ஹர்​மன்​பிரீத் கவுர்​(கேப்​டன்), ஸ்மிருதி மந்​தனா (துணை கேப்​டன்), ரிச்சா கோஷ்(விக்​கெட் கீப்​பர்), உமா ஷெட்​டி, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஹர்​லின் தியோல், ஷபாலி வர்​மா, அமன்​ஜோத் கவுர், தீப்தி சர்​மா, ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்​குர், சரணி, அருந்​ததி ரெட்​டி, ராதா யாதவ்.

தென் ஆப்​பிரிக்​கா: லாரா வோல்​வார்ட்​(கேப்​டன்), டாஸ்​மின் பிரிட்​ஸ், சினாலோ ஜாப்​டா(விக்​கெட் கீப்​பர்), கராபோ மெஸோ(விக்​கெட் கீப்​பர்), அன்​னேக்கே போஷ், நடின் டி கிளர்க், அன்​னேரி டெர்க்​சன், மரி​சான் காப், சுனே லுஸ், நாண்​டுமிசோ சங்​காசே, குளோ டிரை​யான், அயபோங்கா காக்​கா, மசபாட்​டா கிளாஸ்​, நான்​குலுலேக்​கோ லாபா, டுமி செகு​குனே. | நேரம்: பிற்பகல் 3 மணி, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ரூ.40 கோடி பரிசு: இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.40 கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது. உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை சுமார் ரூ.122.5 கோடியாகும். முதலிடம் பெறும் அணிக்கு ரூ.40 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு சுமார் ரூ.20 கோடியும் பரிசாகக் கிடைக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதிப்பாரா? – இறுதிப் போட்டியில் அனைத்து ரசிகர்களின் கண்களும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீது உள்ளது. ஆஸ்திரேலியாவுடனான அரை இறுதிப் போட்டியின்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார் ஜெமிமா. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 127 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஸ்கோரில் 14 பவுண்டரிகளும் அடங்கும். தன் மீது அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாமல் வெற்றி இலக்கை சேஸ் செய்து வெற்றி கண்டு சாதித்தார் ஜெமிமா.

இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எனவே, இறுதிப் போட்டியிலும் ஜெமிமா அதிக ரன்களைக் குவித்து சாதிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மைதானம் எப்படி? – இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நவிமும்பை டி.ஒய் பாட்டீaல் மைதானம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில் மாலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். இருந்தபோதும் இரு அணி வீராங்கனைகளும் அதிக ரன்களைக் குவிக்க முடியும்.

‘கோப்பையை வென்றால் இந்திய அணிக்கு ரூ.125 கோடி’: நவிமும்பையில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினால் ரூ.125 கோடி பரிசளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு ரூ.125 கோடியை பிசிசிஐ பரிசாக வழங்கியிருந்த நிலையில், மகளிர் அணிக்கும் அதே பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.



Read More

Previous Post

வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனி அரசியல் இயக்கம்: மேகாலயா முதல்வர் உள்ளிட்டோர் அறிவிப்பு | Conrad Sangma, Pradyot Manikya and Kikon announce new political entity for northeast

Next Post

இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London

Next Post
இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London

இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் காலமானார் | Hinduja Group Chairman Gopichand P Hinduja Dies At 85 In London

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin