பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட உணவுப் பழக்கத்தில் முட்டையைச் சேர்த்து வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகளில் தேவை மற்றும் உற்பத்தியைப் பொறுத்து முட்டை விலையில் மாற்றம் காணப்படும்.
தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் உற்பத்திக்கு ஏற்ப முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தட்ப வெப்பச் சூழல் மற்றும் பண்டிகைக் காலம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப முட்டை விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். மேலும் பறவைக் காய்ச்சல் போன்ற அசாதாரணச் சூழ்நிலை ஏற்படும்போது முட்டை விலை கடுமையான சரிவைச் சந்திக்கிறது.
குளிர்காலங்களில் இந்தியாவில் வடமாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சீசனில் தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்து காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 3 தினங்களாக இதன் விலை படிப்படியாகச் சரிந்து வருகிறது. பாளையங்கோட்டையில் முட்டை மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.5.30 காசு என சரிந்தது. ஒரு முட்டை விலையில் 1.30 காசு வரை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கியில் 94 காலிப்பணியிடங்கள்… விண்ணப்பம் குறித்த முழுத் தகவல்…
ஆடி மாதம் தொடங்கி விட்டதால் முட்டை நுகர்வு குறைந்து விற்பனையும் சரிந்துள்ளது. இந்த விலை சரிவு அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது போல் அசைவ உணவகங்களில் மொத்தமாக முட்டை வாங்கி வந்த நிலையில் தற்போது கொள்முதல் எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது என பாளையங்கோட்டையைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
