Last Updated:
Egg Prices in Namakkal| நாமக்கல்லில் அதிரடியாக குறைந்த முட்டை விலை, ஒரு முட்டையின் விலை என்னவென்று இங்கு காணலாம்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி அறிவித்து வருகிறது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.00 ஆக இருந்த நிலையில், 20 காசுகள் குறைந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர் சரிவாலும் 5 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ.1.10 குறைந்ததாலும் பண்ணையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 04, 2025 3:23 PM IST

