Last Updated:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் பரிசோதிக்கப்பட உள்ளது.
‘புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் முட்டைகள்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் யூ-ட்யூபில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை முடிவுகள், இணையவாசிகளை கலங்கடித்திருந்தது. இந்நிலையில் முட்டைகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் அளவு பில்லியனுக்கு 0.73 பாகங்கள் மட்டுமே என்றாலும், தயாரிப்பு நிறுவனம் ‘100% ஆண்டிபயாடிக் இல்லாதது’ என்று விளம்பரப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டால் இது நுகர்வோரிடையே நம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இத்துடன் இந்த முட்டைகளிலுள்ள நைட்ரோஃபுரான் மற்றும் நைட்ரோஇமிடசோல் போன்ற மரபணு நச்சுத்தன்மை கொண்ட இரு வேதிப்பொருள்கள் டிஎன்ஏ-வை பாதிக்கக்கூடும் என்றும், அதனால் புற்றுநோய் அபாயம் உயரும் என்றும் அந்த யூடியூபர் கூறியுள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள், ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்கள், மக்கள் என பல தரப்பினரும் இதுபற்றி கேள்வி எழுப்பியதை அடுத்து, எக்கோஸ் நியூட்ரிஷியன் தரப்பில் “எங்களது முட்டைகள், இந்திய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக உட்பட்டவைதான். சுற்றுச்சூழல் காரணி (மாசடைந்த நிலத்தடி நீர் போன்றவை) காரணமாக மிகச் சிறிய அளவிலான வேதியியல் தடயங்கள் இதுபோன்ற ஆய்வுகளில் காணப்படலாம். நாங்கள் முட்டைகளில் எந்த விதமான ஆண்டிபயாடிக்குகளும் பயன்படுத்தப்படவில்லை. நுகர்வோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக NABL அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் கூடுதல் சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான அறிக்கையை தருவோம்” என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் பரிசோதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நேற்று FSSAI சார்பில், இந்தியா முழுக்க உள்ள பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத அனைத்து முட்டைகளும் சாம்பிளாக சேகரிக்கப்படவும், குறிப்பிட்ட 10 ஆய்வகங்களுக்கு அவற்றை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கவும் பிராந்திய அலுவலகங்களுக்கு அறிக்கை வழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள், முட்டையின் தரம் குறித்து நிலவும் முக்கியமான சந்தேகங்களையும் அச்சத்தையும் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனையானது, மிக முக்கியமாக முட்டையில் நைட்ரோஃபுரான் இருக்கிறதா என்பதை அறிய உதவும் என சொல்லப்படுகிறது.
December 16, 2025 12:37 PM IST


