Last Updated:
கோழி தீவன மூலப்பொருட்களான தவிடு, புண்ணாக்கு, சோயாமில் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வருவதால் கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
முட்டை என்றவுடன் நினைவுக்கு வருவது நாமக்கல் தான். இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்கு முழு முதல் காரணம் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பும், முட்டை உற்பத்தியும் பிரதானத் தொழிலாக விளங்கி வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 1100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த முட்டைகள் கேரளாவுக்கு, தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு, வெளிநாடுகளுக்கு என அனுப்பப்பட்டு வருகிறது. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த மண்டலத்தில் உதிரி தீவன மூலப் பொருட்கள் அளவில் வெளிமாநிலத்திலிருந்து தான் வாங்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கலில் தங்கள் தொழிலை வளர்க்கும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது கோழிப்பண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், “முட்டை தொழில் நிரந்தரமாகச் செயல்பட தீவன மூலப் பொருட்கள் விலையைக் குறைக்க வேண்டும். முட்டை ஏற்றுமதி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் முட்டை ஏற்றுமதிக்கு மானியம் உயர்த்தி தர வேண்டும். இதை நிறைவேற்றித் தந்தால் பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியும். எனவே மத்திய அரசை முட்டை ஏற்றுமதிக்கு உண்டான மானியத்தை உயர்த்தி தர வேண்டும்” என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோழி தீவன மூலப்பொருட்களான தவிடு, புண்ணாக்கு, சோயாமில் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வருவதால் கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அதிக அளவில் இருக்கின்றது. கோழி பண்ணையாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் உலக தரம் வாய்ந்த ஆய்வகம், தனிமண்டலம் அமைத்து தர வேண்டும். அதேபோல் பல நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி ஆகிக் கொண்டு இருக்கிறது. எனவே முட்டை ஏற்றுமதிக்கு மானியம் வழங்கிட வேண்டும். முட்டை ஏற்றுமதிக்கு மானியம் வழங்கினால் பல நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய இயலும், இதனால் அந்நிய செலாவணி பெருகும்.
கிராமப் பொருளாதாரம் பெருகும். எனவே கோழிப்பண்ணை தொழிலுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கோழிப் பண்ணையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
Namakkal,Tamil Nadu

