• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த இருவர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

GenevaTimes by GenevaTimes
May 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த இருவர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பொறியாளரான மயங்க் கட்டாரியா, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவைப் பார்த்து, அதில் உள்ள எண்ணுக்கு அழைத்த பிறகு, முடி மாற்று அறுவை சிகிச்சைக்குச் சென்றார். அவருக்கு நவம்பர் 18, 2023 அன்று டாக்டர் அனுஷ்கா திவாரியின் எம்பயர் மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மாயங்கிற்கு கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்து, மறுநாள், நவம்பர் 19 அன்று அவர் இறந்தார்.

அதேபோல் பங்கி மின் உற்பத்தி நிலையத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரியும் வினீத் துபே, மார்ச் 14 அன்று அதே மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரும் இறந்துவிட்டார். அவர்கள் இறந்ததை அடுத்து இரண்டு குடும்பங்களும் புகார் அளித்தனர். புகாரை அடுத்து முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர்களை கைது செய்யச் சென்றபோது, ​​டாக்டர் திவாரி காணாமல் போனார்.

பொறியாளர்களுக்கு என்ன தான் ஆச்சி?

வினீத் துபேயின் மனைவி ஜெயா திரிபாதி, முதலமைச்சரின் இணையதளத்தில் மருத்துவமனைக்கு எதிராக புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த புகாரில், திவாரியின் மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது கணவருக்கு, மறுநாள் அதாவது மார்ச் 14 ஆம் தேதி அன்று அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரின் முகம் வீங்கியுள்ளதாகவும், கடுமையான வலி இருந்ததாகவும் ஜெயா கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் கூடுதல் டி.சி.பி. மேற்கு விஜேந்திர திவேதி கூறியதாவது, அறுவை சிகிச்சையின் போது வினீத் துபேக்கு தொற்று ஏற்பட்டதாகவும், இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாததால், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவரின் சகோதரர் கூறியதாவது, தனது சகோதரருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். மயங்க் கட்டியாருக்கு நவம்பர் 18 அன்று எம்பயர் மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவருக்கு கடுமையான மார்பு வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதாக கூறினார், பின்னர் மறுநாள் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவருக்கு எதிராக FIR பதிவு: வினீத் துபேயின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், மே 9 அன்று பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிரிவு 106(1) இன் கீழ் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக மருத்துவர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, திவாரிக்கு இதுவரை ஆறு நோட்டீஸ்களை போலீசார் அனுப்பியுள்ளனர், ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கல்யாண்பூர் ஏசிபி அபிஷேக் பாண்டே தெரிவித்துள்ளார்.

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் தகுதி பெற்றவரா?

மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, தகுதிவாய்ந்த ஸ்கின் மருத்துவர்கள் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், திவாரி, ஃபரிதாபாத்தில் உள்ள மானவ் ரச்னா பல் மருத்துவக் கல்லூரியில், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை (BDS) பட்டம் பெற்றவர் ஆவார்.

அதே மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிரிழந்த ராம்ஜி சச்சன் என்ற நபர் கூறியதாவது, அறுவை சிகிச்சை 5 முதல் 6 மணி நேரம் நீடித்ததாகவும், சிகிச்சைக்கு பிரகு கடுமையான வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். சிகிச்சைக்காக முன்கூட்டியே பணம் செலுத்தியதாகவும், ஆனால் எம்பயரிடமிருந்து பெற்ற ப்ரிஸ்கிரிப்ஷனில் மருத்துவரின் பெயரோ அல்லது மருத்துவப் பதிவோ இல்லை என்றும் கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து கான்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஹரி தத் நேகி, திவாரி மருத்துவமனையை குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அதாவது மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது, எத்தனை நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை பற்றி இந்தக் குழு ஆராயும்.

First Published :

May 25, 2025 10:12 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மத்துகமவில் நால்வர் சஜித்துடன் இணைந்தனர்

Next Post

6 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்! | indian badminton star kidambi srikanth in malaysia masters final

Next Post
6 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்! | indian badminton star kidambi srikanth in malaysia masters final

6 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்! | indian badminton star kidambi srikanth in malaysia masters final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin