பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் மற்றும் கூட்டணி முடிவு குறித்து ராமதாஸ் மேலும் விளக்கமளித்தார். “கூட்டணி முடிவு செய்ய இது சரியான நேரம் இல்லை. ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பேசி முடிவு செய்யப்படும்,” என்று அவர் கூறினார். பாஜகவிடமிருந்து கூட்டணி அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று மீண்டும் வலியுறுத்தினார். அன்புமணி ராமதாஸுடனான சமீபத்திய சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, “பின்னர் பதிலளிக்கிறேன்” என்று கூறி, மேலும் விவரங்கள் அளிக்காமல் தவிர்த்தார்.

