• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இல்லாத ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய வங்காளதேசம்… காரணம் என்ன…?

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இல்லாத ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய வங்காளதேசம்… காரணம் என்ன…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 04, 2025 3:59 PM IST

வரலாற்றில் முதல்முறையாக, நாட்டின் நிறுவனரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இல்லாத புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்காளதேசம் அறிமுகப்படுத்தியுள்ளது.

News18News18
News18

வங்காளதேசம் சமீபத்தில், அதன் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நாட்டின் நிறுவனர் மற்றும் ‘தேசத் தந்தை’ எனப் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதன் ஒரு பகுதியாக, முதன்முறையாக அவரது உருவம் இல்லாத ரூபாய் நோட்டுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளன. “வங்காளதேச ரூபாய் நோட்டுகளில் இனி எந்த மனித உருவமும் இடம்பெறாது” என்று வங்காளதேச மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் உறுதி அளித்துள்ளார்.

இந்தப் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள், நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்து கோயில்கள் மற்றும் புத்த கோயில்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

வங்காள தேசத்தில் புழக்கத்தில் உள்ள மொத்தம் ஒன்பது வகையான நோட்டுகளில் தற்போது மூன்று நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகளும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போதைய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மாற்றம், வங்காள தேசத்தின் நாணய வடிவமைப்பில் அரசியல் தாக்கங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. முன்னதாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், வரலாற்றில் முதல்முறையாக முஜிபுர் ரஹ்மானின் படம் இல்லாத புதிய ரூபாய் நோட்டுகளை கடந்த வாரம் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, ரூபாய் நோட்டுகளின் முந்தைய வடிவமைப்பை மாற்றுவதற்காகப் புதிய வங்கி நோட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

வங்காளதேச மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர், புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் “இனி எந்த மனிதரின் உருவப்படமும் இருக்காது” என்று கூறியுள்ளார். இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இப்போது, இயற்கை நிலப்பரப்புகள், வரலாற்று அடையாளங்கள் மற்றும் வங்காள தேசத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டும் பிற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்து கோயில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்களின் படங்களும் இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றம், வங்காளதேச ரூபாய் நோட்டான ‘டக்கா’வின் தோற்றத்தைப் பாதிப்பது ஒன்றும் இது முதல்முறை அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு அச்சிடப்பட்ட முதல் ரூபாய் நோட்டுகளில் வங்காளதேசத்தின் வரைபடம் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, வங்கி நோட்டுகள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

June 04, 2025 3:59 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இல்லாத ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய வங்காளதேசம்… காரணம் என்ன…?

Read More

Previous Post

முடிவுக்கு வந்த 18 ஆண்டுகால தவம்! – கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி! | Virat Kohli in tears after RCB 18-year-old wait for IPL title ends

Next Post

ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு | 3 missing Indian nationals rescued in Tehran claims Iranian Embassy

Next Post
ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு | 3 missing Indian nationals rescued in Tehran claims Iranian Embassy

ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு | 3 missing Indian nationals rescued in Tehran claims Iranian Embassy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin