Last Updated:
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சேலம் மாவட்டம், கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9.00 மணி முதல் நண்பகல் 5.00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைசாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர். தோப்பூர், அழகுசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
இதே போன்று கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, இரும்பாலை, மோகன்நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 13) காலை 9.00 மணி முதல் நண்பகல் 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் மின்தேவை இருப்பின் தங்களது மின்தேவைகளை சரி செய்து கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salem,Salem,Tamil Nadu
June 12, 2025 4:46 PM IST
முக்கிய பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு…. லிஸ்டில் உங்க பகுதியும் இருக்கா? செக் பண்ணிக்கோங்க.!


