புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகலாய மன்னர்களின் பெயர் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் பாரதிய பௌத்த சங்கத்தின் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர்.
இதில், ஷாஜகான் சாலைக்கு பதிலாக வீர் சாவர்க்கர் சாலை, துக்ளக் சாலைக்கு பதிலாக அஹில்யா பாய் சாலை, அக்பர் சாலைக்கு பதிலாக மகரிஷி வால்மிகி சாலை, ஹுமாயுன் சாலைக்கு பதிலாக பாலாசாகேப் தாக்கரே சாலை போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிச் சென்றனர்.
இதுபற்றி புது தில்லி முனிசிபல் கவுன்சில் சார்பாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பாரதிய பௌத்த சங்கத்தின் தலைவர் சங்பிரியா ராகுல், “பல கொடுமைகளை நிகழ்த்திய முகலாய மன்னர்களின் பெயரைப் பொது இடங்களுக்குச் சூட்டுவதைத் தடுக்குமாறு பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கவுள்ளோம். எங்களுக்கு முகலாயர்களின் பெயர்கள் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

