• Login
Wednesday, August 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீம் பேஜ் மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த 25 வயது இளைஞர்! ஆனா இவருக்கு இருக்கும் பயத்தை பாத்தீங்களா? | 25-Year-Old Builds Rs.1.6 Crore Through Meme Pages: Now He Wants Advice on Managing His Wealth

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீம் பேஜ் மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த 25 வயது இளைஞர்! ஆனா இவருக்கு இருக்கும் பயத்தை பாத்தீங்களா? | 25-Year-Old Builds Rs.1.6 Crore Through Meme Pages: Now He Wants Advice on Managing His Wealth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீம் பேஜ் மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த 25 வயது இளைஞர்! ஆனா இவருக்கு இருக்கும் பயத்தை பாத்தீங்களா?

இந்தியாவின் டயர் 2 நகரத்தைச் சேர்ந்த 25 வயதே ஆன இளைஞர் ஒருவர் மீம் பேஜ் மற்றும் ஆன்லைன் கன்டன்ட் கிரியேஷன் மூலமாக ரூ.1.6 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். தனது 18-வது வயது முதல் பிரீலான்சிங் மற்றும் ஆன்லைன் வொர்க் செய்து வந்த இவர்.. தனது விடாமுயற்சி மற்றும் முதலீட்டை வைத்து இத்தகைய சாதனையை எட்டியுள்ளார்.

தான் சம்பாதித்த ரூ.1.6 கோடி எங்குள்ளது என்ற விவரங்களையும் அந்த நபர் தனது ரெட்டிட் பதிவில் பகிர்ந்திருந்தார். இவருடைய மொத்த முதலீட்டில் பெரும்பகுதி பங்குகளிலேயே இருக்கிறது. இந்தியன் ஈக்விட்டீஸ் அக்கவுண்ட்களில் 90 லட்சம் ரூபாயை வைத்திருக்கிறார். பேங்க் பேலன்ஸ் மற்றும் கேஷ்-ஆக ரூ.45 லட்சத்தை வைத்திருக்கிறார், ரியல் எஸ்டேட்டில் ரூ.15 லட்சமும், அமெரிக்க பங்குகளில் ரூ.7.5 லட்சமும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.5 லட்சமும், கிரிப்டோ மற்றும் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் ரூ.4 லட்சமும் வைத்திருக்கிறார்.

மீம் பேஜ் மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த 25 வயது இளைஞர்! ஆனா இவருக்கு இருக்கும் பயத்தை பாத்தீங்களா?

அதோடு அந்த இளைஞர் தன்னுடைய தொழில் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தாலும் கண்டிப்பாக ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்? என்ற கேள்வியுடன் பயனர்களின் பதிலை எதிர்பார்த்து போஸ்டை பகிர்ந்திருந்தார்.

முன்பெல்லாம் ஆன்லைன் தொழில் குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்பதை வீடியோவாகப் பதிவிட்டு அதிலிருந்தும் பணம் சம்பாதித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்கு ஒருவர் கன்டன்ட் கிரியேட்டராக இருக்கிறார்.இதுவே அவருக்கு பயமாக மாறி உள்ளது.

இதனால் அந்த இளைஞர் தற்போது வரை தான் சம்பாதித்த பணத்தை பார்த்து பார்த்து முதலீடு செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் சந்தையை நன்கு ஆராய்ந்து வருகிறார். ஆனால் அவருக்கு சரியான இடம் கிடைக்காததால் சுமார் ரூ.30 முதல் ரூ.45 லட்சம் வரையிலான தொகை தன்னுடைய சேமிப்பு கணக்கிலேயே முடங்கி கிடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவருடைய பதிவு பகிரப்பட்டதில் இருந்து பலரும் கமெண்ட் செய்ய தொடங்கினர். அதில் ஒருவர் கையில் அதிக பணம் இருக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். பின்னர் உங்கள் முதலீட்டைப் பல்வகைப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

மற்றொரு நபர் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்திருப்பதில் இருக்கும் அபாயத்தை கூறியிருந்தார். வேறொரு பயனர் உங்களுக்கு தற்போது வரை பணம் ஈட்டி தருவது உங்களுடைய தொழில்தான். எனவே முதலீட்டில் மட்டும் அதிக கவனம் செலுத்தாமல் உங்கள் பணத்தில் குறிப்பிட்ட தொகையை உங்கள் பிசினஸிலேயே முதலீடு செய்யுங்கள். என்று கமெண்ட் செய்திருந்தார்.

Share This Article

Story first published: Wednesday, August 26, 2026, 12:00 [IST]

Other articles published on Aug 26, 2026

Read More

Previous Post

பத்மேயின் அலைபேசிகளில் அதிர்ச்சித் தகவல்: 13 சிறை அதிகாரிகள், 9 அரசியல்வாதிகள், 7 நடிகைகளுடன் தொடர்பு! – Sri Lanka Tamil News

Next Post

அசாம்: வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு | Makkal Osai

Next Post
அசாம்: வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு | Makkal Osai

அசாம்: வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin