Last Updated:
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏற்கனவே ஈரான் தங்களது அணு சக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 12 நாட்களுக்கு இந்த தாக்குதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்தின. இந்நிலையில் தற்போது டெஹ்ரான் மீது அமெரிக்க மற்றும் ஈரான் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் உச்ச தலைவர் அயோதல்லாஹ் அலி கமினேனியின் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
Feb 28, 2026 12:19 PM IST


