நாளையதினம்(22) போர்நிறுத்தம் முடியும் முன் எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றால், ஈரானுடன் மீண்டும் போருக்குச் செல்ல “தயாராக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், “குண்டுவீச்சு நடத்த நேரிடும் என எதிர்பார்ப்பதாக”அவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்பவில்லை
அத்துடன் புதன்கிழமை அன்று காலாவதியாகவுள்ள போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “அச்சுறுத்தல்களின் நிழலிலோ” அல்லது அமெரிக்க கடற்படை முற்றுகையின் கீழோ பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெஹ்ரான் கூறியுள்ளதால், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

