• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! | UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! | UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது யூபிஐ. இத்தனை ஆண்டுகள் இலவசமாக இருந்த யூபிஐ பேமெண்ட்களில் தற்போது வணிகர்களுக்கு கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 15ஆம் தேதி முதல் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக ரீதியான யூபிஐ பேமெண்ட்களுக்கு அந்த வியாபாரி 0.4% வரை MDR – Merchant Discount Rate கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்களுக்கு யூபிஐ எப்போதும் போல இலவசம் தான் ஆனால் வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்நிலையில் வணிகர்கள் அந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்தினால் என்ன ஆகும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!!

லோக்கல் சர்க்கிள்ஸ் (LocalCircles) நடத்திய இந்த ஆய்வில், நாட்டின் 291 மாவட்டங்களை சேர்ந்த 67,000-க்கும் மேற்பட்ட UPI பயனர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 2,000 ரூபாய்க்கு மேல் செய்யும் வணிக ரீதியான யூபிஐ பேமெண்ட்களுக்கு 0.4% எம்டிஆர் கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது திணித்தால், 14% பேர் மட்டுமே கூடுதல் கட்டணத்தை செலுத்தி தொடர்ந்து யூபிஐ பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

சுமார் 27% பேர் ரொக்க பணத்திற்கு மாறுவோம் என்று கூறியுள்ளனர். 26% பேர் கிரெடிட் கார்டு மற்றும் 14% பேர் டெபிட் கார்டுகளுக்கு மாறுவோம் என கூறியுள்ளனர். 4% பேர் வங்கி பரிமாற்றம் முறைக்கு மாறுவோம் என கூறியுள்ளனர்.

இதன் மூலம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மட்டுமே தோராயமாக 39% பங்கை வகிக்கக்கூடும் என்றும், நுகர்வோர் மத்தியில் யூபிஐ பயன்பாடு கணிசமாக குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை தாண்டி, வணிகர்கள் தரப்பிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது.

242 மாவட்டங்களை சேர்ந்த 32,000 வணிகர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு தனிப்பட்ட ஆய்வில், 17% வணிகர்கள் மட்டுமே 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% எம்டிஆர் கட்டணத்தை ஏற்க தயார் என கூறியுள்ளனர். 41% வணிகர்கள், தாங்கள் எந்த விதமான எம்டிஆர் கட்டணத்தையும் ஏற்க போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 9% வணிகர்கள் தாங்கள் யூபிஐ பேம்ண்ட்களை ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே எம்டிஆர் கட்டணம் நடைமுறைக்கு வந்த பின்பு யூபிஐ பரிவர்த்தனைகள் குறைந்து கார்டு அடிப்படையிலான பரிவர்த்தனைகள் அதிகரிக்கலாம் அல்லது மீண்டும் ரொக்க பண புழக்கம் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் அறிவிக்கப்பட்டது முதலே பல வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த எம்டிஆர் கட்டணத்தை வாடிக்கையாளர் மீது சுமத்த கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. தனிநபர்கள் இடையெ யூபிஐ-இல் பணம் அனுப்பவோ, பெறவோ எந்த கட்டணமும் இல்லை, அது இலவசமாகவே தொடரும். ஆனால் ஒரு கடையில் 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குகிறீர்கள் எனும் போது 0.4% எம்டிஆர் உண்டு. அதுவும் வாடிக்கையாளரான நமக்கு இல்லை, மாறாக வணிகர்கள் தான் அதனை செலுத்த வேண்டும், இந்த பணம் வங்கிகளுக்கு , பேமெண்ட் அக்ரீகேட்டர் நிறுவனங்களுக்கும் செல்லும், மத்திய அரசுக்கு இதில் 1 ரூபாய் கூட வராது என அரசும் விளக்கம் தந்துள்ளது.

Share This Article

English summary

UPI MDR Charge From October 15: 76% Users May Shift to Cash and Cards for Payments Above ₹2,000

மீண்டும் பணத்தை கையில் எடுக்கும் மக்கள்.. UPI பேமெண்ட்களுக்கு MDR கட்டணம் எதிரொலி..!! / A new Merchant Discount Rate (MDR) of up to 0.4% will apply to specified person-to-merchant UPI transactions above ₹2,000 from October 15, 2026.

Story first published: Monday, October 5, 2026, 9:55 [IST]

Other articles published on Oct 5, 2026

Read More

Previous Post

TNPSC, UPSC-ல் கட்டாயம் இடம்பெறும் கேள்வி.. இந்தியாவின் வரைபடத்தைத் தீர்மானிக்கும் இந்த நிலப்பரப்பு பற்றித் தெரியுமா..? Malwa Plateau | இந்தியா போட்டோகேலரி

Next Post

ரயில் தாமதங்களால் சலிப்படைந்துவிட்டீர்களா? கேபிள் திருட்டிற்கு கடுமையான தண்டனைகளை வழங்க அமைச்சர் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

ரயில் தாமதங்களால் சலிப்படைந்துவிட்டீர்களா? கேபிள் திருட்டிற்கு கடுமையான தண்டனைகளை வழங்க அமைச்சர் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin