• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..! | Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..! | Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..!

யெமன் நாட்டின் ஹவுதி படைகள் சில வாரங்களுக்கு முன்பு சவுதி ஆரம்கோவின் கிழக்கு மேற்கு பைப்லைன் மீது பெரும் தாக்குதலை நடத்தியதால் சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளை முடங்கியது நினைவிற்கும். இந்த தாக்குதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை 109 டாலர் வரையில் உயர்ந்தது, தற்போது மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

முந்தைய ஹவுதி படைகளின் தாக்குதல் மூலம் கிழக்கு மேற்கு பைப்லைனில் ஏற்பட்ட பாதிப்புகளை, சவுதி ஆராம்கோ ஒரு வாரக் காலத்தில் மொத்தமாகச் சரி செய்யப்பட்டு ஏற்றுமதியைத் துவங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் குறையத் துவங்கி, செங்கடல் வழியாக ஏற்றுமதி சீரானது.

 மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..!

இன்று ஹவுதி படையினர் திடீரென கிழக்குப் பகுதியில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி தளத்தில் இருந்து மேற்கு பகுதியில் இருக்கும் செங்கடலை இணைக்கும் பைப்லைன் திட்டத்தின் தலையாய ஏற்றுமதி தளமான யான்பு துறைமுகத்தில் வடக்கு டெர்மினலை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு முன்பு நடந்த தாக்குதலில் மதினா பகுதியில் இருக்கும் பைப்லைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் தற்போது கப்பலில் ஏற்றுமதி செய்யும் முனையில் தாக்குதல் நடத்தியுள்ளது ஹவுதி படைகள்.

ஹவுதி படையினரின் கடந்த 2 மாத தாக்குதலில் முதல் முறையாகத் துறைமுகத்திற்குள் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் டிரம்ப் பெரும் தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவித்த போது, ஈரான் அடுத்தகட்ட தாக்குதல் வளைகுடா நாடுகளில் இருக்கும் எரிபொருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்த நிலையில் தற்போது ஹவுதி படைகள் இதைச் செய்துள்ளது.

சவுதி அரேபியா ஐரோப்பிய நாடுகளுக்கு வேகமாக எரிபொருளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு யான்பு தொழிற்துறை பகுதியை உருவாக்கியது. இங்கிருந்து தான் கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோ கெமிக்கல், உரம் என பல பொருட்களைச் சவுதி ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் வடக்கு ஏற்றுமதி முனையத்தில் மட்டும் ஒரு நாளுக்கு 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது.

யான்பு துறைமுகத்தில் இருக்கும் பல முனையங்களில் வடக்கு முனையம் தான் மிகவும் முக்கியமானது. ஹவுதி படைகள் இன்று நடத்திய தாக்குதல் மூலம் இந்த முனையத்தில் ஏற்றுமதி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மீண்டும் சர்வதேச சந்தையில் சப்ளை பாதிப்பு ஏற்படும் என்பதால் கச்சா எண்ணெய் விலை உயரலாம். இன்றைய சர்வதேச கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் பிரெண்ட் எண்ணெய் விலை 0.25 சதவீதம் குறைந்து 102 டாலராக குறைந்துள்ளது.

Share This Article

English summary

Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates

Houthi Drone Strike Hits Saudi Arabia’s Yanbu Port: Crude Oil Supply Threat Escalates — மீண்டும் சவுதி அரேபியாவைக் கட்டம் கட்டும் ஹவுதி படைகள்.. யான்பு துறைமுகத்தில் திடீர் அட்டாக்..!

Story first published: Friday, October 2, 2026, 10:55 [IST]

Other articles published on Oct 2, 2026

Read More

Previous Post

சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

Next Post

நேபாளப் பேரிடரில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி இணைப்பு! | Makkal Osai

Next Post
நேபாளப் பேரிடரில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி இணைப்பு! | Makkal Osai

நேபாளப் பேரிடரில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி இணைப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin