• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!! | Trump’s New Generic-Drug Tariff Plan: No Tariffs for 2 Years, Then $100/$200 Levies — What It Means for Pharma and Patients

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!! | Trump’s New Generic-Drug Tariff Plan: No Tariffs for 2 Years, Then $100/$200 Levies — What It Means for Pharma and Patients
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து அதிர்ச்சி தந்த டிரம்ப் தற்போது புதிய வரியை அறிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளின் மீது கடுமையான இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும். ஏனெனில் உலகிலேயே அதிகளவு ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான்.

மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!!

மூன்று நிலைகளாக வரி விதிப்பு செயல்படுத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். இதன்படி முதல் 2 ஆண்டுகள் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு எந்தவிதமான இறக்குமதி வரியும் விதிக்கப்படாது. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, இந்த மருந்துகளின் மீது 100% இறக்குமதி வரி விதிக்கப்படும். அதற்கு அடுத்த கட்டமாக, இந்த வரி 200% ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக அளவில் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வரும்போது, இந்திய மருந்து நிறுவனங்களின் லாப வரம்பு பெருமளவு குறையும். மேலும், அமெரிக்க சந்தையில் இந்திய மருந்துகளின் விலை கணிசமாக உயரும்.

அமெரிக்க சந்தையில் இந்திய மருந்துகளின் விலை உயர்ந்தால் மக்கள் வேறு நாடுகளின் குறைந்த விலை மருந்துகளுக்கு செல்வார்கள். இதனால் ஏற்றுமதி குறைந்து இந்திய மருந்து நிறுவனங்களுக்கு லாபம் குறையும். இதனால் அமெரிக்கா விடுத்து வேறு சந்தைகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை உண்டாகும்.

இந்த நீண்டகால வரி திட்டம் காரணமாக இந்திய மருந்து நிறுவனங்கள் இனிவரும் காலங்களில், தங்களது உற்பத்தி மற்றும் முதலீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது உற்பத்தி மையங்களை அமெரிக்காவிலேயே நிறுவும் நிர்ப்பந்தம் உண்டாகும்.

அமெரிக்கா தனது சொந்த உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது அமெரிக்காவில் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.அமெரிக்காவின் இந்த புதிய கொள்கை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்ளா, லூபின், அரபிந்தோ ஃபார்மா, ஸைடல் போன்ற நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

குறுகிய காலத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் வரி அதிகரிக்கப்பட இருப்பதால் இந்நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களின் ஆலைகளை நிறுவ வேண்டிய சூழல் உண்டாகும். இந்த சிக்கலை எப்படி இந்திய நிறுவனங்கள் கையாளபோகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share This Article

English summary

Trump’s New Generic-Drug Tariff Plan: No Tariffs for 2 Years, Then $100/$200 Levies — What It Means for Pharma and Patients

President Trump announced a phased tariff plan on imported generic drugs: no tariffs for two years, followed by a $100 per unit tariff and later a $200 per unit tariff. The proposal aims to alter global pharma supply chains.

Story first published: Wednesday, July 22, 2026, 9:13 [IST]

Read More

Previous Post

ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

Next Post

வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பற்றி மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை பத்லி வலியுறுத்துகிறார். – Malaysiakini

Next Post

வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பற்றி மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை பத்லி வலியுறுத்துகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin