Last Updated:
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் ஹாங்காங்கிற்கு திருப்பப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 அப்பாவி பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமானத்தில் பயணிப்பவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பினார்.
கோளாறு ஏற்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானத்தைப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். சமீபத்தில் விமான விபத்துக்கள் நடைபெற்று வருவதால், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.
June 16, 2025 12:10 PM IST
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு! மீண்டும் ஹாங்காங்கிற்கு திருப்பப்பட்டது


