மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பட்சத்தில் அவர்களது KYC (know your customer) மீண்டும் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆம் தேதியோடு முடிவடைந்தது. ஆனால் இது சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான குழப்பங்கள் இன்னும் நீடித்து வருகிறது.
KYC ஐ மீண்டும் சமர்ப்பிக்க தவறிய முதலீட்டாளர்கள் புதிய ஃபண்ட் ஹவுஸில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்படலாம் அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் எந்த ஒரு ட்ரான்ஷாக்ஷன்களையும் செய்ய முடியாமல் போகலாம்.
KYC ஐ மிக எளிதாக ஆன்லைனில் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான வசதியை பெரும்பாலான ஃபண்ட் ஹவுஸ்கள் அவர்களது வெப்சைட்டுகளில் வழங்குகின்றன.
முதலில் நீங்கள் உங்களுடைய KYC ஸ்டேட்டஸை சரிபார்க்க வேண்டும்?
தாங்கள் KYC ஐ மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு ஒருவர் தங்களுடைய KYC ஸ்டேட்டஸ் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
உங்களுடைய ஸ்டேட்டஸை சரி பார்ப்பதற்கு நீங்கள் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தக்கூடிய CVL KYC ரெஜிஸ்ட்ரேஷன் ஏஜென்சி (KRA) ஐ பயன்படுத்தலாம். இல்லையெனில் NDML KRA, CAMS KRA அல்லது Karvy KRA-ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
அதே நேரத்தில் மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி போன்ற உங்களுடைய தொடர்பு விவரங்கள் ஏதேனும் ஒரு KYC ரெஜிஸ்ட்ரேஷன் ஏஜென்சிகள் அல்லது KRAகள் மூலமாக சரிபார்க்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
உங்களுடைய KYC ஐ அப்டேட் செய்தல் :
உங்களின் KYC ஸ்டேட்டஸ் என்ன என்பதை தெரிந்து கொண்ட பிறகு ஏதேனும் ஒரு ஃபண்ட் ஹவுஸ் வெப்சைட் மூலமாக அதனை நீங்கள் ஆன்லைனில் அப்டேட் செய்யலாம் அல்லது ஃபண்ட் ஹவுஸ்களில் ஒருவரிடம் நேரடியாக சென்று KYC படிவத்தை சமர்ப்பிக்கலாம். நீங்கள் அப்டேட் செய்த KYC அனைத்து ஃபண்ட் ஹவுஸ்களிலும் இருக்கக்கூடிய உங்களுடைய எல்லா மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் பிரதிபலிக்கும்.
நீங்கள் ஏற்கனவே Edelweiss MF முதலீட்டாளராக இருந்தால் உங்களுடைய அக்கவுண்டில் லாகின் செய்ய வேண்டும். அங்கு உங்களுடைய ப்ரொபைல் செக்ஷனின் கீழ் ‘registered’ அல்லது ‘on hold’ என்று இருந்தால் KYC ஐ அப்டேட் செய்வது எப்படி என்பதற்கான வழிகாட்டுதலை பெறுவீர்கள். இதற்கு நீங்கள் உங்களுடைய டிஜிலாக்கர் அக்கவுண்டில் இருந்து எம்-ஆதார் அல்லது இ-ஆதார் ஐ அப்லோடு செய்ய வேண்டும். இந்த தகவல் பின்னர் UIDAI மூலமாக சரி பார்க்கப்பட்டு உங்களின் KYC ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்படும்.
ஒருவேளை உங்களுடைய KYC ஸ்டேட்டஸ் ‘registered’ என்றிருந்தால் ஏற்கனவே இருக்கக்கூடிய ஃபண்ட் ஹவுஸ்களில் நீங்கள் தொடரலாம். ஆனால் மீண்டும் KYC சமர்ப்பிக்கும் வரை புதிய முதலீடுகளை செய்ய முடியாது.
நேரடியாக செல்ல நினைப்பவர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய QR கோடு காலப்போக்கில் அழிந்து இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் உங்களுடைய KYC அப்டேட் ஆகாமல் போகலாம். எனவே KYV யை மீண்டும் அப்டேட் செய்வதற்கு ஆன்லைன் சிறந்த தளமாக அமைகிறது.
NRIகள் எதிர்கொள்ளும் சிரமம் :
இந்திய முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் NRIகளுக்கு இது சற்று கடினமான சூழ்நிலையாக அமைகிறது. நீங்கள் இந்தியாவில் வசிக்காத ஒரு இந்தியராக இருந்து, உங்களிடம் இந்தியா அல்லாத ஒரு மொபைல் நம்பர் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய KYC ஐ சரி பார்ப்பதற்கு உங்கள் மொபைல் நம்பருக்கு OTP ஐ உங்களால் பெற முடியாது. இதன் விளைவாக உங்களுடைய KYC ஸ்டேட்டஸ் ‘registered’ (மற்றும் not ‘validated’) என்று காண்பிக்கப்படும்.
Also read |
பர்சனல் லோன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூல் செய்து வரும் வங்கிகள்! லிஸ்ட் இங்கே
அதாவது ஏற்கனவே இருக்கக்கூடிய ஃபண்ட் ஹவுஸ்களில் நீங்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்யலாம். எனினும், சரியான ஆவணங்களை வழங்கும் வரை புதிய ஃபண்ட் ஹவுஸ்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
