• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
January 2, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 02, 2026 2:24 PM IST

KYC என்பது உங்களுடைய அடையாளம் மற்றும் முகவரியை சரி பார்ப்பதற்கான ஒரு கட்டாயமான செயல்முறை ஆகும். இது பணமாற்று மோசடிகளை தடுப்பதற்கு உதவுகிறது.

News18
News18

நீண்டகால செல்வத்தை அமைப்பதற்கு முதலீடு செய்வது என்பது மிகவும் எளிமையான வழிகளில் ஒன்றாக அமைகிறது. ஆனால் இதற்கான முதல் படி என்பது எப்பொழுதும் சில அடிப்படை கேள்விகளோடு தொடங்குகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?, நேரடியாக ஃபண்ட் ஹவுஸில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்விகள் எழுகிறது.

இதற்கான கமிஷன் எப்படி இயங்குகிறது? என்பது போன்ற கேள்விகள் இதில் அடங்கும். எனவே, நீங்கள் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த பதிவு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்ட்டை எப்படி திறப்பது, KYC செயல்முறையை நிறைவு செய்வது போன்றவற்றில் ஆரம்பித்து உங்களுடைய முதலீட்டு பயணத்தை துவங்குவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நான் எப்படி முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்? இதற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் யாவை? 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு உங்களிடம் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN), முகவரி சான்றிதழ் (பாஸ்போர்ட், ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம்) மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருக்க வேண்டும். நீங்கள் 50,000 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் PAN கார்டு அதற்கு அவசியம் இல்லை. அதே சமயத்தில் பண பரிமாற்றங்கள் செய்வதற்கு உங்களிடம் ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

நான் நேரடியாக ஃபண்ட் ஹவுஸில் முதலீடு செய்யலாமா அல்லது எனக்கு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் தேவைப்படுமா? 

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை இரண்டு விதமான திட்டங்கள் உள்ளன: ஒன்று டைரக்ட் மற்றொன்று ரெகுலர். ரெகுலர் திட்டங்களை பொறுத்தவரை ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதேபோல டைரக்ட் திட்டங்களில் நீங்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதன் மூலமாக இடைத்தரகரை நீங்கள் தவிர்க்கலாம். நேரடித் திட்டங்களுக்கு வழக்கமாக செலவு விகிதம் ஒரு சதவீதம் இருக்கும் போது, ரெகுலர் திட்டங்களுக்கான செலவு விகிதம் என்பது இரண்டு சதவீதம் வரை ஆகலாம்.

என்னுடைய ஏஜென்ட்க்கு நான் கமிஷன் தொகை செலுத்த வேண்டுமா? 

ஒருவேளை நீங்கள் ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கான கமிஷன் என்பது திட்டத்தின் NAVயிலிருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும். இதற்கான கட்டணம் தனியாக காண்பிக்கப்படாது. அதனை நீங்கள் உங்களுடைய ஸ்டேட்மெண்ட்களில் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகருடன் இணைந்து முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் அவர் வழங்கும் சேவைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கமிஷன் கட்டணங்களை தவிர்ப்பதற்கு நீங்கள் ஃபண்டு ஹவுஸில் நேரடியாக முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு முன்பு KYC -ஐ நிறைவு செய்ய வேண்டும் என்று என்னுடைய ஃபண்ட் ஹவுஸ் கூறுகிறது. ஏற்கனவே என்னுடைய வங்கியில் நான் KYC ஆவணங்களை நிறைவு செய்து விட்டேன். இப்பொழுது மீண்டும் அதனை நான் செய்ய வேண்டுமா?

இதையும் படிங்க: Gold Price | இந்தாண்டு தங்கம் விலை இப்படி தான் இருக்கும்.. நிபுணர்கள் விளக்கம்..!

KYC என்பது உங்களுடைய அடையாளம் மற்றும் முகவரியை சரி பார்ப்பதற்கான ஒரு கட்டாயமான செயல்முறை ஆகும். இது பணமாற்று மோசடிகளை தடுப்பதற்கு உதவுகிறது. ஆதார் அடிப்படையிலான KYC என்பது OTP மூலமாக சரிபார்ப்பு செயல்முறையை மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் செய்கிறது. இது ஆவணங்களின் தேவையை குறைத்து, செயல்முறையை விரைவாக்குகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் முதலீடு செய்ய ஆரம்பிக்க எவ்வளவு தொகை தேவைப்படும்?

நீங்கள் குறைந்தப்பட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். முதலீட்டு தொகைக்கான குறைந்தபட்ச வரம்பு என்பது குறிப்பிட்ட திட்டம் மற்றும் SIP பொருத்து மாறுபடும். எனவே உங்களுடைய இலக்கு தொகை, கால அளவு மற்றும் ஃபண்டு வகையை பொறுத்து நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

Read More

Previous Post

Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு | இந்தியா

Next Post

தனக்கு பெரிக்காத்தான் தலைவராக விருப்பமில்லை என்கிறார் சனுசி – சம்சூரி மொக்தாரே அப்பதவிக்குத் தகுதியானவர் | Makkal Osai

Next Post
தனக்கு பெரிக்காத்தான் தலைவராக விருப்பமில்லை என்கிறார் சனுசி – சம்சூரி மொக்தாரே அப்பதவிக்குத் தகுதியானவர் | Makkal Osai

தனக்கு பெரிக்காத்தான் தலைவராக விருப்பமில்லை என்கிறார் சனுசி - சம்சூரி மொக்தாரே அப்பதவிக்குத் தகுதியானவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin