Last Updated:
கிடங்கு முழுவதும் தரைமட்டமான நிலையில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மியான்மர் நாட்டின் நாம்காம் நகரில் வெடிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நாம்காம் நகரின் கவுங்துப் கிராமத்தில் சீன எல்லையையொட்டிய பகுதியில் கிடங்கு ஒன்றில் வெடிப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிடங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மண்டலம் சூழ்ந்தது.
55 people, including children, were killed and around 70 injured after a massive explosion occurred at a gelignite explosives warehouse in Kaungtup village, northeastern #Myanmar. pic.twitter.com/u1vQZeYoNA
— HadashotIsrael (@HadashotIsrael) May 31, 2026
வெடிவிபத்தால் கிடங்கு முழுவதும் தரைமட்டமான நிலையில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கிடங்கின் அருகே இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகளும் வெடி விபத்தின் தாக்கத்தால் சேதமடைந்தன.
Jun 01, 2026 10:41 AM IST


