• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மின் கம்பத்தில் ஏறி இணைப்புகளை துண்டித்த காங்கிரஸ் எம்எல்ஏ…! காரணம் என்ன தெரியுமா…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மின் கம்பத்தில் ஏறி இணைப்புகளை துண்டித்த காங்கிரஸ் எம்எல்ஏ…! காரணம் என்ன தெரியுமா…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 27, 2025 4:47 PM IST

ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, மின் கம்பத்தின் மீதேறி மின் இணைப்புகளை துண்டித்தார்.

Rapid Read
News18
News18

உத்தராகண்டில் மின்வெட்டால் கோபமடைந்த ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஜப்ரேடாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, ரூர்க்கியில் உள்ள மின்சாரத் துறையின் 3 மூத்த அதிகாரிகளின் வீடுகளுக்கான மின்சார இணைப்பைத் துண்டித்தார்.

அறிக்கையின்படி, ஜப்ரேடாவில் தினமும் 5 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ இந்த நடவடிக்கையை எடுத்தார். மின் இணைப்பை துண்டிப்பதற்காக, எம்எல்ஏ மின்கம்பங்களில் ஏறியதால் கோபமடைந்த மின்சாரத்துறை, எம்எல்ஏ மீது ரூர்க்கி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று மின் கம்பங்களில் ஏணி மற்றும் கருவிகளுடன் ஏறி, எரிசக்தி கழகத்தின் தலைமைப் பொறியாளர் அனுபம் சிங், கண்காணிப்புப் பொறியாளர் விவேக் ராஜ்புத் மற்றும் நிர்வாகப் பொறியாளர் வினோத் பாண்டே ஆகியோரின் அரசு குடியிருப்புகளின் மின் இணைப்புகளைத் துண்டித்தார்.

ஜப்ரேடா எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, தனது ஆதரவாளர்களுடன் மின்வெட்டுக் கருவிகள் மற்றும் ஏணியை ஏந்தி ரூர்க்கிக்கு வந்தார். பின்னர், அவர் முதலில் வோட் கிளப்பில் அமைந்துள்ள கண்காணிப்புப் பொறியாளர் விவேக் ராஜ்புத்தின் அரசு இல்லத்திற்கு வெளியே உள்ள மின்கம்பத்தில் ஏறி அவரது வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்தார்.

இதன் பின்னர், எம்.எல்.ஏ. தலைமைப் பொறியாளர் அனுபம் சிங் மற்றும் நிர்வாகப் பொறியாளர் வினோத் பாண்டே ஆகியோரின் இல்லத்தை அடைந்தார். அங்கும் அவரே மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்தார். எரிசக்தி கழகத்தின் மூத்த அதிகாரிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பல நாட்களாக எந்த முன்னறிவிப்பும் இல்லாத 5 முதல் 8 மணி நேர மின்வெட்டால் தனது பகுதியில் உள்ள மக்கள் கடுமையான அவதிப்படுவதாக எம்எல்ஏ வீரேந்திர ஜாதி குற்றம்சாட்டினார். இந்த மின்வெட்டால் மக்கள் தங்கள் தொழிலில் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் எம்எல்ஏ வீரேந்திர ஜாதி குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: India’s First Train | இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் ரயில் எது தெரியுமா…? பாம்பே – தானே ரயில் இல்லை…!

மேலும், கடந்த 10 நாட்களாக இந்தப் பிரச்சனையை துறையிடம் எழுப்பி வருவதாகவும், ஆனால் யாரும் கவனம் செலுத்தவில்லை என்றும், இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறியுள்ளார். அதிகாரிகளை விமர்சித்த வீரேந்திர ஜாதி, ஒரு மணி நேர மின்வெட்டால் அதிகாரிகள் வருத்தமடைந்ததாகவும், அதே நேரத்தில் பொதுமக்கள் தினமும் பல மணி நேரம் இருளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: தங்கத்தைவிட பல மடங்கு அதிக விலை கொண்ட உலகின் அரிதான உலோகம்…! எது தெரியுமா…?

எம்எல்ஏவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று மின்சாரத்துறை விவரித்துள்ளது. ரூர்க்கி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், எம்எல்ஏ முறையான மின்வெட்டு இல்லாமல் மின்கம்பிகளை துண்டித்ததாகவும், இது ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்றும் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

Location :

Uttarakhand (Uttaranchal)

Read More

Previous Post

ஊழல் வழக்குகளில் சில அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பா? – Malaysiakini

Next Post

கோத்த பாரு, மெலூர் பொதுச் சந்தை கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பத்து பேர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் | Makkal Osai

Next Post
கோத்த பாரு, மெலூர் பொதுச் சந்தை கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பத்து பேர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் | Makkal Osai

கோத்த பாரு, மெலூர் பொதுச் சந்தை கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பத்து பேர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin