• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின்னல் தாக்கியதில் எரிந்த மரம் – மௌசெல்ல மேல் பிரிவில் சம்பவம்

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 3 mins read
0
மின்னல் தாக்கியதில் எரிந்த மரம் – மௌசெல்ல மேல் பிரிவில் சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசெல்ல மேல்பிரிவு பெருந்தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் பலரது குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.


இச்சம்பவம் நேற்று மாலையில் பதிவானதாக அப்பகுதிக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.


நேற்று வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த வேளையில், கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.


இதன்போது பழமையான மரங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


வீடுகளுக்கான மின் இணைப்புகளும், மின் சுவிட்சுகளும் (ஆழிகள்) தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் தொலைக்காட்சி, வானொலி, மின் அயர்ன் பாக்ஸ் (அழுத்தி), மின் அடுப்புகள் மற்றும் சில வீடுகளிலிருந்த குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின் உபகரணங்களும் எாிந்து சேதமடைந்துள்ளன.


மேலும், கால்நடைகளுக்குப் புல் வெட்டச் சென்றவர்களும், விறகு சேகரிக்கச் சென்றவர்களும் கத்திகளுடன் வேலை செய்துகொண்டிருந்தமையால், அவர்களும் பகுதியளவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


மௌசெல்ல மேல்பிரிவு பெருந்தோட்டம் அப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காடொன்றிற்கு அருகில் அமைந்துள்ளது.


சுமார் 200 குடும்பங்கள் வாழும் இத்தோட்டத்தில் சுமார் 100 சிறுவர்கள் வரை பாடசாலைக்குச் செல்கின்றனர்.


மாணவர்கள் தினமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்தே சென்று கல்வி கற்று வருகின்றனர்.


மாணவர்கள் செல்லும் பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டமும் காணப்படுவதால், பெற்றோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.


பல பெருந்தோட்டங்களில் இடிதாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், மௌசெல்ல மேல்பிரிவில் இடிதாங்கி எதுவும் அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, தோட்ட நிர்வாகம் இடிதாங்கி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதுடன், மௌசெல்ல மேல் பிரிவு முதல் நோணாவத்தை வரையிலான 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பேருந்து சேவை ஒன்றையும் ஏற்படுத்தித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Read More

Previous Post

‘விசுவாசம்’ தொடர்பான பதிவுகளுக்காக ஃபிர்தௌஸ் வோங் மீது கணபதிராவ் வழக்கு

Next Post

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்… என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்… என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்... என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin