Last Updated:
பிகாரில் மின்னல் தாக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நாளந்தாவில் 22 பேர் உயிரிழந்தனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்த விபத்துகளில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்தது மட்டுமின்றி கால்நடைகளும் பாதிப்பை சந்தித்தன. இந்த நிலையில், மின்னல் பாய்ந்தும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக, நாளந்தா மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பாட்னா, போஜ்பூர், சிவான், கயாவில் தலா 4 பேரும், கோபால்கஞ்ச் (Gopalganj ), ஜமுய் மாவட்டத்தில் (Jamui) தலா 3 பேரும் உயிரிழந்தனர்.
இதேபோன்று, முஷாபர்பூர், ஜெகனாபாத், பெகுசராய், பஹல்பூர், தார்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 38 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
April 11, 2025 10:10 PM IST
மின்னல், ஆலங்கட்டி மழையால் 61 பேருக்கு நேர்ந்த சோகம்… வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!


