மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு எதிராக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் மின்சிகரெட் பயன்படுத்தி பிடிபட்டால் அவர்களின் அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
4D லாட்டரியில் 50 மேற்பட்டோர் வெற்றி… ‘2250’ என்ற அதிஷ்ட எண்ணுக்கு கொட்டிய பரிசு!
மேலும் அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் மின்சிகரெட்களுடன் பிடிபட்டால் அது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நேற்று (ஆகஸ்ட் 28) அதிகாரிகள் அறிவித்தனர்.
மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்று சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாரி உட்பட 4 வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநர் அதில் பயணித்த ஊழியர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
குறுகிய கால வருகை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மீண்டும் அதே குற்றம் செய்தால் அவர்கள் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும்.
EP அனுமதி, S பாஸ் அனுமதி, ஒர்க் பெர்மிட் அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மூன்றாவது முறையாக மின்சிகரட் வைத்திருந்து பிடிபட்டால் அவர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படலாம். அவர்கள் நாடு கடத்தப்படலாம், மேலும் சிங்கப்பூருக்குள் அவர்கள் மீண்டும் நுழையத் தடை விதிக்கப்படலாம்.
மேலும் மூன்றாவது முறையாக குற்றம் புரியும் மாணவர் அனுமதி, சார்பு அனுமதி போன்ற நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கும் அதே தண்டனை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் மின்சிகரெட் புழங்கி வெளிநாட்டு ஊழியர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று மனிதவள இணையமைச்சர் தினேஷ் வாசு தாஷ் தெரிவித்தார்.
இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்

