• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’மின்சார சபை ஊழியர்கள் உரிமை பாதுகாக்கப்படும்’

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’மின்சார சபை ஊழியர்கள் உரிமை பாதுகாக்கப்படும்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது, ஊழியர்களுக்கு தற்போதுள்ள அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


இது ஒரு குறுகிய கால அல்லது இலகுவான செயல்முறை அல்ல, மாறாக நீண்டகால மற்றும் திட்டமிட்ட ஒரு மாற்றமாகும். இந்த மாற்றத்தின் போது ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகள் மற்றும் முறையான பொறிமுறை அவசியம் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.


ஊழியர்களின் மன அமைதியை உறுதிப்படுத்துதல், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் அவர்கள் திருப்தியுடன் பணியாற்றுவதற்கான சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


நாட்டின் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதிப்படுத்தவும், துறைசார்ந்த சவால்களை முறியடிக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.


புதிய மாற்றத்தின் அவசியத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு, எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.


வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (a)




Read More

Previous Post

காட்டில் காணாமல் போனவர் 5 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார் | Makkal Osai

Next Post

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

Next Post
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin