ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க், ரோஹித் சர்மாவின் விக்கெட்டைச் சிலமுறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித்தின் விக்கெட் அவருக்கு இன்னும் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது. குறிப்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் பார்டர்-கவாஸ்கர் தொடர்களில், ஆஸ்திரேலியாவின் வேகமான மற்றும் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களிலும் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொண்டு தனது விக்கெட்டை தற்காத்துக்கொண்டதோடு, 65-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களையும் உயர்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளார் ரோகித்.

