பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் எம்பியுமான ப்ரஜ்வல் ரேவன்னாவின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகத்தில் வேலை கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து அதனை ப்ரஜ்வல் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பதிவான வழக்குகளில் பிணை கோரிய பிரஜ்வலின் மனுவை கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து பிரஜ்வல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் சதிஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிரஜ்வல் மிகவும் அபாயகரமான நபராக இருக்கிறார் என்றும்,
அவர் மீது அதிக புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
