Last Updated:
பொருளாதார மற்றும் தனிநபர் சரிபார்ப்பு செயல்முறையில் ஆதாரின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த சமயத்தில் ஆதாரில் உள்ள விவரங்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. அதனை செய்வதற்கு மாஸ்க்டு ஆதார் உதவுகிறது.
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் ஒரு 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இது பல்வேறு அரசு தொடர்பான பலன்கள் மற்றும் நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இதுதவிர ஆதார் என்பது அட்மிஷன், பேங்கிங், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு படிவங்களில் ஒரு அடையாள சான்றிதழாகவும் செயல்படுகிறது.
பொருளாதார மற்றும் தனிநபர் சரிபார்ப்பு செயல்முறையில் ஆதாரின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த சமயத்தில் ஆதாரில் உள்ள விவரங்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. அதனை செய்வதற்கு மாஸ்க்டு ஆதார் உதவுகிறது.
மாஸ்க்டு ஆதாரில் ஒரு ஆதார் அட்டையில் உள்ள முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே வெளிப்படையாக அச்சிடப்பட்டிருக்கும். இந்த மறைக்கப்பட்ட எண்கள் xxxxxxxx மூலமாக மாற்றப்பட்டு இருக்கும். இதன் மூலமாக உங்களுடைய முழுமையான ஆதார் விவரங்களை பிறர் உங்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தடுக்கலாம்.
இது பிரைவசியை அதிகரித்து, அடையாளத் திருட்டு மற்றும் மோசடி ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. வழக்கமான ஆதாரோடு ஒப்பிடும்போது இந்த மாஸ்க்டு ஆதார் அட்டையும் சமமாக செல்லுபடியாகும் என்பதை 2016ஆம் ஆண்டு வெளியான ஆதார் விதி கூறுகிறது. பெரும்பாலான e-KYC செயல்முறைகள் அதாவது டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங் செய்வது, வேலை விண்ணப்பங்கள் போன்றவற்றிற்கு மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம்.
UIDAI வெப்சைட்டில் இருந்து மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி?
- முதலில் நீங்கள் UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
- அங்கு ‘My Aadhaar’ டேபின் கீழ் காணப்படும் ‘Download Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ID (EID) அல்லது 16 இலக்க வெர்சுவல் ID (VID) ஆகியவற்றில் ஒன்றை என்டர் செய்யுங்கள்.
- கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடை நிரப்பிவிட்டு ‘Send OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ என்டர் செய்யவும்.
- ”Do you want a masked Aadhaar?” என்ற பெட்டியை டிக் செய்யுங்கள்.
- உங்களுடைய அடையாளத்தை நிரூபிப்பதற்கு பெறப்பட்ட வெரிஃபிகேஷன் கோடை என்டர் செய்ய வேண்டும்.
- பின்னர் ‘Verify and Download’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது பாஸ்வோர்ட் மூலமாக பாதுகாக்கப்பட்ட ஒரு PDF ஆவணமாக உங்களுடைய மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் செய்யப்படும்.
- இதற்கான பாஸ்வேர்ட் என்பது உங்களுடைய பெயரின் முதல் 4 எழுத்துக்கள் (கேப்பிட்டல் லெட்டரில்) மற்றும் நீங்கள் பிறந்த வருடம் ஆகும்.
mAadhaar மூலமாக மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?
- முதலில் mAadhaar அப்ளிகேஷனை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுடைய விருப்ப மொழி, பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பெறப்பட்ட OTP ஆகியவற்றை வழங்கவும்.
- இப்போது டேஷ் போர்டில் உள்ள ‘Get Aadhaar’ என்பதன் கீழ் உள்ள ‘Download Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
- ஆதார் வகையிலிருந்து Masked Aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களுடைய ஆதார் நம்பர், EID அல்லது VID மற்றும் கேப்சா கோடை என்டர் செய்யுங்கள்.
- மொபைல் நம்பரில் கிடைத்த வெரிஃபிகேஷன் OTP-ஐ என்டர் செய்து ‘Verify and Download’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் ஆகிவிடும்.
DigiLocker மூலமாக மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?
- DigiLocker-க்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பர், லாகின் ID, பாஸ்வேர்ட் அல்லது ஆதார் நம்பர் மூலமாக லாகின் செய்யவும்.
- OTP வெரிஃபிகேஷன் செயல்முறையை நிறைவு செய்யுங்கள்.
- இப்போது சர்ச் பாரில் UIDAI என்று தேடி அதில் ‘Aadhaar’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்துவிட்டு மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ பயன்படுத்தி வெரிஃபை செய்யவும்.இப்போது உங்களுடைய மாஸ்க்டு ஆதார் ‘Issued Documents’ டேபின் கீழ் காணப்படும். அங்கிருந்து அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
November 10, 2025 1:53 PM IST


