பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்
சில மணி நேரம் தாமத்திற்கு பின் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்ற விமானம் பாதுகாப்பாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதன்பின் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்துக்கட்சி எம்பி-க்கள் குழுவினை வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த குழு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (23/05/2025) மாஸ்கோவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

