மாஸ்கோவில் உள்ள ஃப்ரயாசினோவில் எட்டு மாடிகள் கொண்ட ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் எட்டு பேர்கள் பலியாகி உள்ளதாக ஆளுநர் Andrey vorobyov தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் கூறினர்.
தீ விபத்தின் போது உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக ஜன்னலில் இருந்து குதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அலுவலகத்தில் உட்புறம் தீயினால் 6 பேர்கள் உயிரிழந்ததாக Andrey Vorobyov தகவலை பதிவிட்டுள்ளார். அந்த கட்டிடம் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து தனியார் மயமாக்கப்பட்டதுஎன்று எலக்ட்ரானிக்ஸ் அமைப்பான Ruselectronics நிறுவனம் கூறியது.

