சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் ஜூன் 29ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் மாளவ்ய ராஜயோகம் உருவாகி உள்ளது.
ஜூலை 26 வரை ரிஷப ராசியில் சுக்கிரன் சச்சரிக்கும் நிலையில், அடுத்த 28 நாட்களுக்கு, மேஷம் ரிஷபம் உள்ளிட்ட சில ராசிகள், பணவரவை குறைவில்லாமல் பெற்று, பணக்காரர்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேசமயம் சுக்கிரன், சில ராசிகளுக்கு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுப்பார்.
மேஷ ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
பணவரவிற்கு குறைவிருக்காது. வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள்.
ரிஷப ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
மாளவிய ராஜயோகத்தினால் ஆளுமை மேம்படும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வருமானத்திற்கு குறைவிருக்காது. நிதிநிலைமை மேம்படும்.
மிதுன ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.. கடின உழைப்பின் பலனை முழுமையாக பெற முடியாமல் போகலாம். ஆடம்பரம் மற்றும் வசதிக்காக அதிக பணத்தை செலவழிக்க நேரிடலாம்.
கடக ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. எனினும், முதலீட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்ம ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
பயணங்கள் ஆதாயத்தை தரும். புதிய வருமான ஆதாரங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
பேச்சாற்றல் மூலம் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத விதமாக வரும் பண வரவு, கடன்களை தீர்க்க உதவும். எனினும் பணிச்சுமை சிறிது அதிகரிக்கலாம். இதனால் உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம்.
விருச்சிக ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். சக ஊழியர்கள் உடனான, கருத்து வேறுபாடுகள் சில பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உடல் நலன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
உடல் நலன் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் பணி அழுத்தம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம். உறவில் நல்லிணக்கம் இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
மகர ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும் வாய்ப்பு உண்டு.
கும்ப ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரனின் அருளால் புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுப காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு புதிய உயரங்களை தொடுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
மீன ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
ஆடம்பர செலவுகளால் நிதி நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. வேலையை மாற்ற நினைக்கலாம். பரஸ்பர புரிதல் இல்லாமை மற்றும் மோதல் காரணமாக, குடும்பத்தில் பதற்றம் இருக்கலாம். உடல் நல பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.