இந்தியா-மாலத்தீவு இடையிலான பழைய ஒப்பந்தங்களை விசாரிப்பதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இருநாட்டு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று முகமது முய்சு வலியுறுத்தி வந்தார். இருப்பினும், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்தியாவுடன் மாலத்தீவு மேற்கொண்ட 4 பழைய ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு நாடாளுமன்றக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில், இந்தியா-மாலத்தீவு இடையிலான கடல் எல்லை வரையறை, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட உதுரு திலஃபல்ஹூ கப்பல் கட்டுமானம், இந்தியா பரிசாக வழங்கிய டோர்னியர் விமானம் ஆகியவை குறித்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
உலகில் ரகசியமாக செயல்பட்ட அணு ஆயுத நகரம் கண்டுபிடிக்கப்பட்டதா? இணையத்தில் தீயாய் பரவிய தகவல்
இவை அந்நாட்டின் இறையான்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் என மாலத்தீவின் நாடாளுமன்ற குழு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
