அரசியல் வியாபாரத்திற்காக, கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக பேசி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை, சென்னையில் அக்கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்திய அரசு பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
CPI(M) Election ManifestoThe Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
CPI(M) Lok Sabha Elections, 2024 Manifesto Summary: CPI(M) Appeals to the Indian Electorate to:
o Defeat the BJP and its allies.
o Increase the strength… pic.twitter.com/X94Ex9Nv1o— CPI (M) (@cpimspeak) April 4, 2024
மேலும், அதிக பணக்காரர்கள் மீதும், செல்வ வளங்கள் மீதும், பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கொண்டு வர உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளை தாய் மொழியில் எழுத நடவடிக்கை, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை, சிஏஏ சட்டம் ரத்து, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா அடுத்து வரும் தேர்தலிலே செயல்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இதையும் வாசிக்க:
150 அடி தேர் கவிழ்ந்து விபத்து : பெங்களூரு பிரபல கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், தேர்தல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு பற்றி பாஜக பேசுவதாகக் கூறினார்.மேலும், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு ஒத்திசைவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…