நமது அன்றாட உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் தக்காளியின் விலை, கடந்த 2 வாரமாகத் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து குறிப்பிடும்படியாக இல்லை.
இதனால் நெல்லை நயினார் குளம் மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்று 30 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, ரூ.2 ஆயிரத்திற்கு விலை போனது. மார்க்கெட்டில் சில்லரை விலைக்குக் கிலோ ரூ.90 வரை விற்பனை ஆனது. தூத்துக்குடி மார்க்கெட்டிலும் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையில் விற்கப்பட்டது. இதனால் தக்காளி விலையைக் கேட்ட பலரும் குறைந்த அளவிற்கு தக்காளி வாங்கிச் சென்றனர். உழவர் சந்தைகளிலும் கிலோ தக்காளி ரூ.75 முதல் 90 வரை தரத்திற்கு ஏற்றாற்போல் விற்பனையானது.
இதுகுறித்து வெளி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், “தக்காளி வரத்து தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. 30 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து வரத்து குறைந்தால் வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: காய்கறி மார்கெட்டிற்கு நாட்டுக் காய்கறிகள் வரத்து உயர்வு… தக்காளி விலை என்ன தெரியுமா..?
இன்னும் ஓரிரு நாளில் மொத்த விலைக்குத் தக்காளி கிலோ ரூ.100யை எட்டவும் வாய்ப்பிருக்கிறது. தக்காளி விலையைக் கேட்டு மக்கள் குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர். இதனால் குறைந்த அளவில் கொள்முதல் செய்கிறோம்” என்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் பீன்ஸ் கிலோ ரூ.110, அவரைக்காய் ரூ.120 பட்டர்பீன்ஸ் ரூ.230, வெள்ளை கத்திரிக்காய் ரூ.90க்கும் விற்பனையாகி வரும் நிலையில் மற்ற காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் ஓரளவிற்கு காய்கறி விலை நிலவரம் உள்ளது. விவசாயிகள் நேரடியாக இந்த உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பதால் வெளி மார்க்கெட்டை விட இங்கு விலை குறைவாகவே உள்ளது. இருப்பினும் நேற்று தக்காளி, முருங்கைக்காய் விலை சற்று உயர்ந்திருந்தது. இன்று மீண்டும் அது குறைந்தது, இன்று நெல்லிக்காய் விலை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மேலவாசல் முருகனை தரிசித்தால் போதும்… அறுபடை வீடுகளிலும் வழிபட்ட பலன் கிட்டும்…
மகாராஜ நகர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.66, முருங்கை கிலோ ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல்லிக்காயும் கிலோ ரூ.60 இலிருந்து 20 ரூபாய் அதிகரித்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
