• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மாரத்தான்… டிரையத்லான்… விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள் என்னென்ன..?

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
மாரத்தான்… டிரையத்லான்… விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள் என்னென்ன..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 7:35 AM IST

1998- ஆம் ஆண்டு, நாசா, விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள சுனிதா வில்லியம்சை தேர்வு செய்தது. 8 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பின்னர் 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி புறப்பட்டார்.

சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமி திரும்பிய நிலையில், விண்வெளியில் அவர் செய்த சாதனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் பூமி திரும்புதலை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க கடற்படை விமானியாவார். அமெரிக்க விண்வெளி மையமான நாசா, 1998-ஆம் ஆண்டு, விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள சுனிதா வில்லியம்சை தேர்வு செய்தது. 8 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பின்னர் 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி விண்வெளி புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14-வது குழுவின் உறுப்பினராக பயணித்த சுனிதா, அதன் பொறியியல் வல்லுநர் பணியை மேற்கொண்டார். அப்போது அவர், 29 மணி நேரம் விண்நடை மேற்கொண்டு, சாதனை படைத்தார். பின்னர் 2012-ஆம் ஆண்டு, விண்வெளிக்கு மீண்டும் பயணித்த சுனிதா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார்.

விண்வெளி நிலையத்தின் ரேடியேட்டரில் அம்மோனியா கசிவை சரிசெய்ய சுனிதா மூன்று விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டார். இது மட்டுமல்லாமல், அப்போது, விண்வெளியில் மராத்தானில் ஈடுப்பட்ட முதல் நபர் என்ற சாதனையையும் புரிந்தார். புகழ்பெற்ற பாஸ்டன் மராத்தானில் பங்கேற்க பதிவு செய்திருந்த சுனிதா, விண் பயணம் மேற்கொண்டதால், விண்வெளி நிலையத்தில் உள்ள டிரெட்மில்லில் நடந்து நான்கரை மணி நேரத்தில் பாஸ்டன் மராத்தானுக்காக நிர்ணயித்த தூரத்தை கடந்தார்.

இதையும் படிக்க: விநாயகர் சிலை.. கும்பமேளா புகைப்படங்கள்..  சுனிதா வில்லியம்ஸ் உறவினர் சொன்ன தகவல்!

இதேபோல், 2012-ஆம் ஆண்டு, விண்வெளியில் டிரையத்லான் மேற்கொண்டு சாதனை படைத்தார். எதிர்ப்பு பயிற்சிகளைப் பயன்படுத்தி நீச்சல் அடித்து, நிறுத்தி வைக்கப்பட்ட கைக்கிளை ஒட்டி, டிரெட்மில்லில் நடந்து டிரையத்லானை நிறைவு செய்தார்.

தனது பணிகளுக்காக சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2008-ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

First Published :

March 19, 2025 7:25 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Sunita Williams | மாரத்தான்… டிரையத்லான்… விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள் என்னென்ன..?

Read More

Previous Post

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

Next Post

கோலாலம்பூரில் பிறந்த ஜெயா லட்சுமி இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் குடியுரிமையை நிராகரிப்பதா? குடும்பத்தார் கேள்வி | Makkal Osai

Next Post
கோலாலம்பூரில் பிறந்த ஜெயா லட்சுமி இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் குடியுரிமையை நிராகரிப்பதா? குடும்பத்தார் கேள்வி | Makkal Osai

கோலாலம்பூரில் பிறந்த ஜெயா லட்சுமி இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் குடியுரிமையை நிராகரிப்பதா? குடும்பத்தார் கேள்வி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin