• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாமா ஜெயிலிலேயே சாகணும்.. கோர்ட்டில் 7 வயது பெண் எமோஷனல்.. டெல்லி பெண் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு | Emotional 7 year old Girl.. Uncle Should Die in Jail.. Delhi Woman Judge’s Different Verdict

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மாமா ஜெயிலிலேயே சாகணும்.. கோர்ட்டில் 7 வயது பெண் எமோஷனல்.. டெல்லி பெண் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு | Emotional 7 year old Girl.. Uncle Should Die in Jail.. Delhi Woman Judge’s Different Verdict
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Hema Vandhana

Time
Updated: Wednesday, September 30, 2026, 18:56 [IST]

டெல்லி: டெல்லியில் 7 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு இப்போது 10 வயது… அந்த சிறுமி நீதிமன்றத்தில் தனக்கு நடந்ததை துணிச்சலாக சொன்னாள்.. அதுமட்டுமல்ல, “என்னை காயப்படுத்திய அந்த மாமா, வயதாகும் வரை ஜெயிலிலேயே இருக்க வேண்டும்” என்று பெண் நீதிபதியிடமே அந்த குழந்தை கேட்டிருந்தாள். இப்படியொரு வார்த்தையை நீதிபதி எதிர்பார்க்கவில்லை.. உடனே அந்த சிறுமிக்கு, பெண் நீதிபதி கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.. இந்த கடிதம்தான் இப்போது கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி டெல்லியில் இந்த சம்பவம் நடந்தது.. அங்கு வசிக்கும் 7 வயது சிறுமியை சுமித் ஷ்க்யா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Delhi Woman Judge

நீதிபதி ரஜனி ரங்கா

இந்த சம்பவம் தொடர்பாக சுமித் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் விசாரணை, டெல்லியின் ரோகிணி நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிபதி ரஜனி ரங்கா முன்பு நடைபெற்று வந்தது.

அப்போது விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றவாளி சுமித்தை அடையாளம் காட்டினாள்.. மாமாவை ஜெயிலில் போடுங்க… வயதாகும் வரை அவர் ஜெயிலிலேயே இருக்க வேண்டும்” என்று நீதிபயிடம் கூறினாள்.. உடனே சிறுமியின் இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதி ரஜனி ரங்கா, தனது தீர்ப்பை வழங்க தயாரானார்.

ஆனால், வழக்கமான சட்ட நடைமுறைகளில் தீர்ப்பை வழங்க அவர் விரும்பவில்லை.. அதற்கு பதிலாக, அந்த சிறுமிக்கு கடிதம் எழுதினார்.. அந்த கடிதத்திலேயே தன்னுடைய தீர்ப்பையும் வழங்கினார்.

மாமாவுக்கு வயதாகும்வரை சிறை

“அன்பான குழந்தையே.. “அந்த மாமா வயதாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்” என்று நீ சொன்னதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.. அதற்கேற்ப உன் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது… நீ, “மாமா” என்று கூப்பிட்ட அந்த நபர் இனி எப்போதுமே சுதந்திரமாக வெளியே வர முடியாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வாழ்வார், அங்கேயே வயதாவார், அங்கேயே இறப்பார்.

அவர் இனி ஒருபோதும் உன்னையோ, உன் தங்கையையோ அல்லது வேறு எந்தக் குழந்தையையோ காயப்படுத்த முடியாது. இந்த நீதிமன்றம் பார்த்ததிலேயே மிகவும் தைரியமான சிறுமி நீதான். நீ நீதிமன்றத்திற்கு வந்தாய், உனக்கு கெடுதல் செய்த நபரை சுட்டிக்காட்டினாய், உண்மையைச் சொன்னாய்.

நீ, “மாமா” என்று அழைத்த அந்த நபர் உனக்கு மிக மோசமான செயலை செய்துவிட்டார்.. அப்போதும் நீ அமைதியாகி விடவில்லை.. உடனே உன் அம்மாவிடம் அதை சொன்னாய். உனக்கு இருந்த அந்த துணிச்சலால், இனி அவரால் வேறொரு குழந்தையைக் காயப்படுத்த முடியாது.

சிரி, விளையாடு, பள்ளிக்கு செல்

உன் குழந்தைப் பருவத்தை இந்த நீதிமன்றத்தால் உனக்கு திரும்பத் தர முடியாது. ஆனால், உன் வார்த்தைகள் செவிமடுக்கப்பட்டன.. உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதை இந்த நீதிமன்றம் உனக்கு உறுதியாக சொல்கிறது.. உனக்குத் தீங்கிழைத்த அந்த நபர் இனி ஒருபோதும் சுதந்திர மனிதனாக சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியாது.

இப்போது, மகளே, உன் வாழ்க்கையை வாழ்… பள்ளிக்குச் செல். நண்பர்களை உருவாக்கு, சிரி, விளையாடு, கனவு காண்பாய்.. உன் துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று நீதிபதி எழுதியிருந்தார்..

அதாவது குற்றம் சாட்டப்பட்ட சுமித்துக்கு, வாழ்நாள் முழுவதும் கடுமையான சிறைத்தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தண்டனையை உறுதிசெய்த நீதிபதிகள்

இந்த தீர்ப்பை எதிர்த்து சுமித் டெல்லி ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் தினேஷ் புட் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 23ம் தேதி விசாரித்தது.

அப்போது, கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், நீதிபதி ரஜனி ரங்கா தெரிவித்த அந்த செய்தியை அச்சிட்டு, சிறுமியிடமோ அல்லது அவளது குடும்பத்தினரிடமோ ஒப்படைக்குமாறு வட-மேற்கு டெல்லி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அத்துடன், அந்த இழப்பீடுத் தொகையை 2 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதல்முறை கடிதம்

குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இப்போது நிறுத்திவிட்டு, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. ஆனால், வழக்கில் இருக்கும் ஆதாரங்களையும் தடயவியல் சோதனை முடிவுகளையும் பார்த்த நீதிபதிகள், இப்போதைக்கு அவரை ஜாமீனில் வெளியே விட மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு மீண்டம் நவம்பர் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.. மேல்முறையீஙட்டு வழக்கு ஜனவரி 20, 2027 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால், போக்சோ வழக்கின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிபதிகள் தனியாக கடிதம் எழுதியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பைத் தாண்டி, அந்த குழந்தையின் மனதை புரிந்துகொண்டு எழுதப்பட்ட இந்த கடிதம் கவனம் பெற்றுள்ளது…!!

English summary

Emotional 7 year old Girl.. Uncle Should Die in Jail.. Delhi Woman Judge’s Different Verdict

Read More

Previous Post

அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை! நீதிமன்று உத்தரவு

Next Post

H1B விசா: அக்.1 முதல் டிசிஎஸ், இன்போசிஸ், HCL ஊழியர்களுக்கு வேட்டு! முதல்ல உங்க சம்பளம் எவ்வளவுன்னு சொல்லுங்க | H-1B Visa Selection Rules Change from Oct 1: How Wage-Level Priority Hits TCS, Infosys, and HCL IT Staff

Next Post
H1B விசா: அக்.1 முதல் டிசிஎஸ், இன்போசிஸ், HCL ஊழியர்களுக்கு வேட்டு! முதல்ல உங்க சம்பளம் எவ்வளவுன்னு சொல்லுங்க | H-1B Visa Selection Rules Change from Oct 1: How Wage-Level Priority Hits TCS, Infosys, and HCL IT Staff

H1B விசா: அக்.1 முதல் டிசிஎஸ், இன்போசிஸ், HCL ஊழியர்களுக்கு வேட்டு! முதல்ல உங்க சம்பளம் எவ்வளவுன்னு சொல்லுங்க | H-1B Visa Selection Rules Change from Oct 1: How Wage-Level Priority Hits TCS, Infosys, and HCL IT Staff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin