சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் வன்னியர் சங்கம் மற்று பாமக கட்சி சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், சமூக நீதியை முன்னிலைப்படுத்துவதுடன், மருத்துவர் இராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடி வரும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகும். மேலும், வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடங்கும் என தெரிவித்தார்.

